CLICK TO VISIT LATEST POSTS

Saturday, December 8, 2012

12.12.12 strike

AIPEU Class 3, Class 4 NFPE GDS (NFPE)


--------------------------------------------------------------------------------------------------------------
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் , P 3, P 4, GDS (NFPE)
கடலூர் கோட்டம்
--------------------------------------------------------------------------------------------------------------
அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே வணக்கம் ! தேதி:- 04.12.2012


              அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் 01.01.2011 முதல் 7 வது ஊதிய குழுவை அமைப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 2012 ஜூலை 26 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியின் முடிவில் 7 வது ஊதிய குழு அமைத்தல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 12.12.2012 அன்று ஒரு நாள் GDS உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாக அறைகூவல் விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நமது தபால் துறையில் NFPE சங்கம் (P3, P4, GDS (NFPE ), R3,R4, ADMINI UNION ), அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து மாநில வாரியாக , மண்டலம் வாரியாக வேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தி வருகின்றது . நமது தமிழ் மாநில P 3 சங்கமும் கோட்ட ரீதியாக கூடங்கள் நடத்த அழைப்பு விடுத்து, ஒவ்வொரு கோட்டத்திற்கும், ஒரு மாநில சங்க பொறுப்பாளரை கலந்து கொள்ள உத்தரவிட்டுள்ளது . எனவே நமது கோட்டத்தில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் கீழ்வருமாறு நடைபெறும்.


நாள் : 06.12.2012

நேரம் : மாலை 05.30 மணி

இடம் : சிதம்பரம் தலைமை அஞ்சலகம்

சிறப்புரை : N செல்வம் , P 3 CIRCLE ORGANISING SECRETARY

அனைத்து கடலூர் கோட்ட தோழர்களும் , தோழியர்களும் வேலை நிறுத்த விளக்க கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம் .

15 அம்ச வேலை நிறுத்த கோரிக்கைகள்:


1. 01.01.2011 முதல் ஏழாவது ஊதிய குழுவை GDS ஊழியர் உள்ளிட்ட அனைவருக்கும் அமைத்து பணப்பயன்கள் அளிக்க வேண்டும்: 6 வது ஊதிய குழு 28% லிருந்து 40 சதம் வரை உயர்வு அளித்தவுடன் அதனை நாம் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டோம் . ஆனால் அதற்கு பிறகு வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டதினால் சொல்லொன்னா துயரத்தில் இருக்கின்றோம் . 2009 ல் வெறும் 42 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று ஏறத்தாழ 80 ரூபாய் . 2008 க்கு பிறகு 16 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது . அரிசி, பருப்பு , எண்ணெய் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன . காய்கறி விலை நினைத்தாலே குலை நடுங்குகிறது . நம்மை போல் உழைக்கும் வர்க்கம் வாங்கும் சம்பளதிற்குள் வாழ்வது என்பது தான் உலக அதிசயம் . எனவே இந்த விலை வாசி உயர்விலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள ஒரே வழி ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கபடுவது தான் . பல்வேறு மாநிலங்களிலும் , பொதுத்துறை நிறுவனங்களிலும் 5 வருடங்களுக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்க படுகின்றது . பல தனியார் துறைகளில் 4 வருடங்களுக்கு ஒரு முறையும் , போக்குவரத்து துறையில் 3 வருடங்களுக்கு ஒரு முறையும் சம்பள விகிதங்கள் மாற்றபடுகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் வங்கி மற்றும் காப்பீடு துறைகளில் 9 முறை சம்பளம் மாற்றி .அமைக்கப்பட்டுள்ளது . ஆனால் நமக்கு இது வரை 6 முறை மட்டுமே சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது . எனவே 5 வருடத்திற்கு ஒரு முறை சம்பள விகிதங்கள் மாற்றப்பட வேண்டும், என்ற நமது கோரிக்கை நியாயமானதே.


2. 50 சதவிகித பஞ்ச படியை GDS ஊழியர் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் 01.01.2011 முதல் அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்: முந்தைய ஊதிய குழுக்கள் DA 50 % உயரும் போது அடிப்படை ஊதியத்துடன் இணைக்க பரிந்துரை செய்துள்ளன. ஆனால் ஆறாவது ஊதியக்குழு 50 சதவிகித்தை ஊதியத்துடன் இணைக்க சொல்லி பரிந்துரை செய்திருந்தால் அனைத்து படிகளும் உயர்ந்திருக்கும் . ஓய்வு பெரும் அனைவருக்கும் அடிப்படை PENSION மாற்றப்பட்டு ஓய்வு பயன்கள் அதிகரித்திருக்கும் . 50 சதவிகித பஞ்ச படியை GDS ஊழியர் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் அடிப்படை ஊதியத்துடன் 01.01.2011 முதல் இணைக்கப்பட வேண்டும்.


3. பணியில் இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் முழுமையாக வழங்கிட வேண்டும் .


4. GDS ஊழியர்களை இலாக்கா ஊழியர்களாக்கி அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். ஊதிய பாதுகாப்பு , கால அளவிலான பதவி உயர்வு , மருத்துவ செலவு திரும்ப பெறுதல் , BPM பணப்பரிமாற்றதிர்க்கான அளவீட்டு புள்ளிகளை மாற்றுதல் . MTS , POSTMAN தேர்வுகளில் வெளியார் நியமனம் ஆகியவற்றை நீக்குதல் - இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் .


5. GDS ஊழியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள BONUS பாகுபாட்டை நீக்கி மற்றைய அரசு ஊழியர்கள் போல உயர்த்தப்பட்ட BONUS வழங்க வேண்டும்.


6. பகுதி நேர / முழு நேர தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு 01.01.2006 முதல் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.


7. மிகுதி நேரப்படி மற்றும் இரவு பணிப்படி உயர்த்தப்பட வேண்டும் .


8. ஆட்குறைப்பு , அரசு பணிகளை தனியாருக்கு விடுதல் , CONTRACT முறை பணிகள் தனியார்மயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் .


9. அனைவருக்கும் 5 கட்ட பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.


10. நடுவர் மன்ற தீர்ப்புகளை உடன் அமல் படுத்த வேண்டும்.


11. கூட்டு ஆலோசனை குழு கூட்டங்கள் அனைத்து மட்டங்களிலும் முறையாக நடத்திட உறுதி செய்திடவேண்டும்.


12. புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்.


13. விலை வாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும். பொது விநியோக திட்டம் சீரமைக்கப்பட வேண்டும்.


14. தொழிற்சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் போக்கு மாற்றப்பட வேண்டும்.


15. தொழிசங்க உரிமைகள் பறிக்கப்பட கூடாது


வேலை நிறுத்தம் செய்திடும் உரிமை சட்டமாக்கப்படவேண்டும்


எனவே மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 12.12.2012 அன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தில் GDS ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டு வெற்றி பெற செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.


தோழமையுடன்


AIPEU GDS (NFPE) P .ரவி செயலர் P 3 R . குணசேகரன் செயலர் P 4




அனுப்புதல் பெறுதல்


செயலர்கள்


NFPE P3, P4, GDS(NFPE )


கடலூர் கோட்டம்.