"Transparency international" என்னும் அமைப்பு உலகில் உள்ள நாடுகளில் 2010 ல் உயர்மட்ட அளவில் ஊழல்கள் இருப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா 87 ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவித்து உள்ளது. அதிக ஊழல்கள் புரிந்த நாடு 0 என்றும் ஊழலே இல்லாத நாடு 10 என்றும் ஓர் அளவுகோலை வைத்து ஓர் அட்டவணை உருவாக்கப்பட்டதில் இந்தியா 3.3 என்ற இலக்கை எட்டி உள்ளது. நாட்டை நல்வழியில் செலுத்துவதற்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திடவும் உயர் மட்டத்தில் உள்ள லஞ்ச ஊழலை ஒழிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்றாகும்.