CLICK TO VISIT LATEST POSTS

Friday, January 21, 2011

ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள கடன் எவ்வளவு?

ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள கடன் எவ்வளவு?

தமிழக சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று முடிந்தது. அதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தனிநபர் கடனை பொறுத்தவரை, மராட்டியத்தில் ஒரு நபருக்கு ரூ.18,575 ம், ஆந்திரத்தில் அது ரூ.16,494 ஆகவும், கர்நாடகத்தில் ரூ.15,103 ஆகவும், கேரளத்தில் ரூ.23,991 ஆகவும் உள்ளது. தமிழகத்திலோ அது ரூ.14 ஆயிரத்து 353 ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும்.

தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது. தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல. கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
courtersy: vimalavan.wordpress.com