CLICK TO VISIT LATEST POSTS

Wednesday, January 12, 2011

CITU National council at Nasik

UPA-II  அரசிற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் CITU பொதுக் குழு முடிவு


நாசிக், ஜன. 11-
ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள் கைகளை எதிர்த்து போராட் டத்தை தீவிரப்படுத்துவது என்று சிஐடியு முடிவு செய் துள்ளது. நாசிக்கில் நடை பெற்று வந்த சிஐடியு அகில இந்திய பொதுக்குழுக் கூட்டம் செவ்வாயன்று முடிவடைந்தது.
விலைவாசி உயர்வு எதிர்ப்பு, முன்பேர வர்த்தகத்திற்கு தடை, பொதுவிநியோக முறையை விரிவாக்குவது, தொழிற்சங்க உரிமைகளுக்கு எதிரான தாக்கு தல், தொழிலாளர் நலச்சட் டங்களை வலிமையாக செயல் படுத்துவது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்ப னைக்கு எதிர்ப்பு, வேலை பாது காப்பு, முறைசாராத் தொழி லாளர்களின் சமூக நலத்திட் டங்களுக்கு போதிய தேசிய நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளி வர்க் கம் நடத்திய வரும் பிரச்சார இயக்கத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு குறித்து பொதுக் குழு திருப்தி தெரி வித்தது.



இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தும், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்தும் பிப்ரவரி 23ம்தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெறவுள்ள பேர ணிக்கு பல்வேறு மாநிலங் களில் நடைபெற்று வரும் தயா ரிப்பு பணிகள் குறித்து பொதுக் குழு பரிசீலித்தது.



மத்திய அரசின் பட்ஜெட் பரிந்துரைகள் குறித்து தொழி லாளி வர்க்கம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும், பட்ஜெட்டில் தொழிலாளர் கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் இடம் பெறவில்லை என்றால் உடன டியாக நாடு முழுவதும் தீவிர மான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் பொதுக் குழு முடிவு செய்தது.



காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் வலதுசாரி ஆதரவு கொள்கை கள் பின்பற்றப்படுவது குறித்து சிஐடியு பொதுக் குழு கவலை தெரிவித்தது. சிறப்புப் பொரு ளாதார மண்டலம் தொடர் பான கொள்கைகள், ஈபிஎப் பென்சன் திட்டம், இடது சாரிக் கட்சிகள் தவிர காங் கிரஸ் மற்றும் பாஜக கட்சித் தலை வர்களால் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு பெருமளவு நடத்தப்படும் ஊழல் ஆகிய வற்றை எதிர்த்து பெரும்திர ளான பிரச்சார இயக்கத்தை நடத்துவது என்று பொதுக் குழு முடிவு செய் துள்ளது.



இந்த முதலாளித்துவ கட்சி களுக்கும், பெரும் முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ ஊட கத்தின் ஒரு பகுதியினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள புனித மற்ற கூட்டை மக்களிடம் விரி வாக அம்பலப்படுத்துமாறு சிஐடியு மாநிலக் குழுக்கள் மற்றும் சம்மேளன அமைப்பு களை பொதுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.



இந்தச் சூழ்நிலையில் இடது சாரிகள் மட்டுமே தொழிலா ளர்களின் உரிமைகளுக்காக சமரசமின்றி போராடி வருகின் றன. வலதுசாரி ஆதரவு கொள் கைகளுக்கு எதிராகவும், இடது சாரிக் கட்சிகளை ஆதரித்தும் மார்ச் 21 முதல் 27ம்தேதி வரை அனைத்து மாநிலங்களிலும் நாடு தழுவிய பிரச்சார இயக் கத்தை நடத்துவது என்று பொதுக் குழு முடிவு செய்துள் ளது.



சர்வதேச வர்க்கப் பார்வை யோடு, ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் போராட்டங் களை நடத்தக் கூடிய ஒரே சர்வ தேச அமைப்பான தொழிற்சங் கங்களின் உலக கூட்டமைப் பில் (டபிள்யுஎப்டியு) சிஐடியு இணைவது என்று பொதுக் குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கிரீஸ் நாட் டின் ஏதென்ஸ் நகரில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள் டபிள்யுஎப்டியு மாநாட்டிற்கு பொருத்தமான முறையில் பிரதி நிதிகளை அனுப்புவது என்றும் பொதுக் குழு முடிவு செய் துள்ளது. தொழிலாளி வர்க்கத் திற்கு எதிரான தாக்குதல்களை முறியடிக்க உலக அளவிலான ஒற்றுமையை வலுப்படுத்து வதற்காக அந்த மாநாடு நடை பெறவுள்ளது.