இந்திய அஞ்சல் நிர்வாகம் கடந்த 10.11.2010 முதல் நாடு முழுவதும் 89 speed post hub மட்டுமே செயல்படும் விதத்தில் உத்தரவிட்டு உள்ளது. தமிழ் நாட்டில் சென்னை, வேலூர், ஜோலார்பேட்டை, சேலம், கோவை, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், ஆகிய 10 இடங்களில் செயல்படுகிறது. இதற்கு சொல்லப்படும் காரணம் கையாளுவதில் சிரமம் குறையும். Track and trace facility உத்திரவதப்படுத்த முடியும். பைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். நடைமுறையில் ஊழியர் மத்தியில் RMS அலுவலகங்களை குறைப்பதற்கான முன்னோடித் திட்டமோ என்ற எண்ணம் உள்ளது.
speed post என்ற பெயரால் அனுப்பப்படும் தபால்களும் மிகவும் கால தாமதமாக சென்றடைகிறது.
முன்பெல்லாம் சென்னை நகர அலுவலகங்களுக்கும் மற்ற முக்கிய நகரங்களுக்கும் நேரடியாக RMS அலுவலகங்கள் மூலமாக பைகள் கட்டப்பட்டு delivery உத்திரவாத படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது speed post hub மூலமாகத்தான் பைகள் கட்டப்பட வேண்டும். அஞ்சல் நிர்வாகம் ஊழியர் தரப்பு கருத்துக்களை கேட்காமல் கொள்கையை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இதன் விளைவு speed post கால தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் counter ல் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் சச்சரவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த speed post hub நடைமுறையை நிர்வாகம் ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். ஊழியர்களே பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர். ஆகவே நிர்வாகம் எந்த ஒரு திட்டத்தையும் அறிமுகப் படுத்து முன் ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் தீவிரமாக கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
SPEED POST HUB குறித்த விரிவான கட்டுரை JANUARY 2011 உழைக்கும் வர்க்கம் இதழில் வெளி வந்துள்ளது.
முகவரி:
J. ரங்கநாதன்.
ஆசிரியர், உழைக்கும் வர்க்கம், 191/50 தர்கா ரோடு, பல்லாவரம்,
CHENNAI 600 043. 5 ஆண்டு சந்தா Rs. 250/-