வ.உ.சி. தியாகி மட்டுமல்ல - சிறந்த எழுத்தாளர், இலக்கியவாதி, கவிஞரும்கூட; அவருடைய படைப்புகள் ஆய்வு நோக்கில் பாராட்டப்படுபவையாகும். விவேகபானு (அறிவுக் கதிர்) எனும் பத்திரிகையையும் நடத்தியுள்ளார்.
கூட்டுறவு இயக்கம், தொழிலாளர் இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் கருத்து செலுத்தி ஆக்க ரீதியாகப் பாடு பட்டவர்.
சுதேசி இயக்கம் சுதேசி இயக்கம் என்று பேசுவார்கள். உள்ளபடியே வெள்ளைக் காரர் களை எதிர்த்து சுதேசி ஸ்டீம் நேவிகேசன் (Swedeshi Steam Navigation Company) என்ற பெயரில் நிறுவனத்தைத் துணிந்து தொடங்கியவர் வ.உ.சி. வெள்ளைக் காரர்கள் வெகுண் டார்கள்.
தூத்துக்குடியில் மிகப் பிர்மாண்டமான தொழிலாளர் வேலை நிறுத்தத்தை நடத்திக் காட்டியவர் வ.உ.சி.,
வ.உ.சி. மீது இ.பி.கோ. 123ஏ பிரிவின் படியும் 157 ஏ பிரிவின் படியும் குற்றச் சுமத்தப்பட்டது.
வெள்ளைக்கார நீதிபதி வ.உ.சி., பற்றி எழுதிய தீர்ப்பு என்ன தெரியுமா?
சிதம்பரம்பிள்ளை மேன்மை தங்கிய மன்னர்பிரானது குடிகளில் இரு வர்க்கத் தாரிடையே பகைமையையும் வெறுப்பை யும் ஊட்டுபவர் (வெள்ளைக்காரர் -இந்தியர் என்றபேதம்) அவர் வெறுக்கத்தக்க ராஜ துரோகி. அவருடைய எலும்புகள்கூட சாவிற்குப்பின் ராஜதுவேசத்தை ஊட்டக் கூடியவை என்று எழுதினார் என்றால், உண்மையான போராட்ட வீரர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ராஜதுரோகத்துக்காக 20ஆண்டுகளும், அரசியல் குற்றவாளியான சிவாவுக்கு அடைக் கலம் அளித்ததற்காக 20 ஆண்டுகளும் வ.உ.சி.க்கு தண்டனை அளிக்கப்பட்டது. (இரட்டை ஆயுள் தண்டனை?)
கோவை சிறையில் செக்கிழுத்தார். இப்படியெல்லாம் உழைத்த வ.உ.சி. 1920இல் காங்கிரசை விட்டு விலகி தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டார்.
அவரின் கடைசிக் காலம் வறுமையில் புதைந்தது;
வ.உ.சி. தன் பிள்ளைகளுக்கு ஓர் அரசுப் பணி வாங்குவதற்குக் கூட சிரமப் பட்டார். தன் மகனுக்கு சர்க்கிள் இன்ஸ் பெக்டர் பணிக்கு சிபாரிசு செய்து உதவும்படி தந்தை பெரியாருக்கு வ.உ.சி. கடிதம் எழுதினார் என்றால், நிலைமையைப் புரிந்து கொள்ளலாமே.
காலம் கடந்தாலும் செக்கிழுத்த செம் மலை - தன் வக்கீல் தொழில் சன்னத்தை இழந்த உண்மையான தியா கியை நினைவு கூரும். வண்ணம் மத்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்துக்குப் பொருத்த மாக வ.உ.சி. யின் பெயரை சூட்டியது வரவேற்கத்தக்கதே!
courtesy : viduthalai dt 27.01.11