CLICK TO VISIT LATEST POSTS

Sunday, February 27, 2011

தொழிலாளர் பேரணி யை இந்திய ஊடகங்களில்


ஈரைப் பேனாக்கும் ஊடகங்கள்   மக்கள் கடலைக்   கண்டு கொள்ளாதது ஏன்?  தொழிற்சங்கங்கள் கேள்வி
புதுதில்லியில் பிப்ரவரி 23 ஆம் தேதி யன்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் அழைப்பிற்கு இணங்கி லட்சோப லட்சத் தொழிலாளர்கள் பேரணியாக வலம் வந்த னர். இந்த மகத்தான தொழிலாளர் பேரணி யை இந்திய ஊடகங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அலட்சியப்படுத்தியதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.

நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு சுண்டுவிரலில் சுளுக்கு என்றால் அரை நாள் நிகழ்ச்சி களை நிறுத்திவிட்டு, அதுபற்றிய செய்தி களை வெளியிடும் தொலைக்காட்சி நிறு வனங்கள், 5 லட்சம் தொழிலாளர்கள் பங் கேற்ற பேரணிக்கு ஒரு சில விநாடிகள் ஒதுக்கிவிட்டு விட்டுவிட்டன. அச்சு ஊட கங்கள் இவ்வளவு பெரிய நிகழ்வை உள் ளூர் செய்தியாக்கிவிட்டன.

இந்தப் பேரணி நடைபெற்ற சாலையில் ஒரு பத்திரிகையின் அலுவலகம் உள்ளது. தங்களுக்கு ஒதுக்கியுள்ள அறையில் உட்கார்ந்தவாறே அப்பத்திரிகையினர் புகைப்படம் எடுத்திருக்க முடியும். ஆனால் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் புகைப் படத்தை அப்பத்திரிகை பிரசுரித்திருந்தது. இவ்வாறு பத்திரிகைகள் புறக்கணித்ததை வைத்து மெயில் டுடே பத்திரிகை கீழ்க் கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது. இந் தப்பத்திரிகையும் பேரணி செய்தியை வெளி யிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தங்களின் பிரம்மாண்ட பேரணி பற்றி மிகவும் குறைவான அளவில் பத்திரிகை கள் செய்தி வெளியிட்டது குறித்து தொழிற் சங்கத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ள னர். மேற்கு ஆசியா மற்றும் உலகின் மற்ற பகு திகளில் நடைபெறும் போராட்டங்களுக்கு நேரம் ஒதுக்கும் தேசிய தொலைக்காட்சி கள் மற்றும் நாளிதழ்கள், முதன்முறையாக மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய கூட்டுப்பேரணியைக் கண்டு கொள்ளவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகின் மற்ற பகுதிகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் எழுப்பப் படும் விலையுயர்வு, தொழிலாளர் சட்ட மீறல் கள், வேலையின்மை, சமூகப் பாதுகாப்பின்மை ஆகிய பிரச்சனைகளைத்தான் தில்லிப் பேரணியும் எழுப்பியது என்கிறார்கள்.

தேசியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தச் செய்தியை ஒளிபரப்பவில்லை. ஆனால் அதேவேளையில், வெளிநாட்டு செய்தி நிறுவனங்களான ராய்ட்டர்ஸ் மற் றும் ஏ.எப்.பி. ஆகியவை செய்தி வெளியிட் டன. பிபிசி மற்றும் சிஎன்என் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒளிபரப் பின. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மற் றும் உழைப்பாளிகளின் பிரச்சனைகளை எதிரொலித்ததாக பேரணி பற்றி இந்த ஊடகங்கள் குறிப்பிட்டன. ஆனால், இந் திய வரலாற்றில் பொதுப் பிரச்சனைகளுக் காக முதன்முறையாக அனைத்துத் தொழிற் சங்கங்களும் கைகோர்த்ததை பத்திரிகை கள் பிரசுரித்திருக்க வேண்டும் என்கிறார் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர் ந்து மேற்கொண்டு வந்த சிஐடியுவின் தலைவர் ஏ.கே.பத்மநாபன்,

மேலும் பேசிய அவர், லிபியா உள் ளிட்ட மற்ற நாடுகளில் நடக்கும் போராட் டங்களை எழுதி பக்கங்களை பத்திரிகை கள் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். துனீ சியாவில் உணவு, சுதந்திரம் மற்றும் கவு ரவத்திற்காகப் போராடுகிறார்கள். இந்தி யாவில் கவுரவமாக வாழ சமூகப் பாதுகாப்பு கோரியும், தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக்கோரியும் போராடியுள்ளனர். சொந்த நாட்டில் லட்சக்கணக்கான தொழி லாளர்களின் உணர்வுகளை இந்திய ஊட கத்துறை புரிந்து கொள்ளவில்லை என்று ஆவேசத்தோடு குறிப்பிட்டார்.

நாங்கள் அனைவரும் ஒன்று திரண் டுள்ளோம். எப்போதும் இல்லாத அள விலான இந்த ஒற்றுமையை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். பேரணி பெரும் வெற்றி பெற்றது என்கிறார் ஐ.என். டி.யு.சி.யின் தலைவரான ஜி.சஞ்சீவ ரெட்டி. பேரணியின்போது எந்தவித அசம்பாவித மும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தலை வர்கள் அக்கறை காட்டினர். பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் காவல்துறையிடம் தொடர்பு கொண்டிருந்தோம். லட்சக்கணக்கானோர் தலைநகருக்குள் வந்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது இயல்புதான் என் றார் ஏ.கே.பத்மநாபன்.

பெரிய தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறை, காப்பீட்டு நிறுவனங்கள், அரசு அலு வலகங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரி வோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம், தேசிய சுகாதாரத்திட்டம், பாரத் நிர்மாண், மதிய உணவுத்திட்டம் மற்றும் அங்கன்வாடி ஆகி யவற்றில் பணியாற்றும் ஆயிரக்கணக்கா னோர் பேரணியில் கலந்து கொண்டனர் என்று விளக்கினார் ஏ.கே.பத்மநாபன். மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதி ராக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும், தேசிய சம்மேளனங்களும் ஒன்று சேர்ந்து, இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசின் மக்கள் விரோதக் கொள் கைகளை விலக்கிக் கொள்ளுமாறு கேட் டுக் கொண்டுள்ளன என்று தெரிவித்தார் அவர்.”

இவ்வாறு மெயில் டுடே செய்தி வெளி யிட்டுள்ளது.