CLICK TO VISIT LATEST POSTS

Thursday, April 28, 2011

வர்க்கப்போராட்டங்களுக்கு வலுவூட்டும் மாநாடு -ஏ.கே.பத்மநாபன்







                     மனிதகுல வரலாற்றில் பல்வகை சிறப்புகளைக்கொண்ட கிரேக்க நாட்டின், புகழ்மிக்க தலைநகரம் ஏதென்ஸ். சிறிய நாடானாலும், கிரேக்கத்தின் பண்டைய புகழுக்குஏற்றாற்போல், இன்றும் பல் வகை சிறப்புகளைக்கொண்டநாடு. உலகம் முழு வதும் முதலாளித்துவ நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்த நெருக்கடியின் கோரவிளைவு களால் பெரிதும் பாதிப்புக்குள் ளாகியுள்ள மக்கள். இந்த நெருக்கடிகளின் விளைவுகளுக்கு எதிராக வீரஞ்செறிந்த வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள், கிளர்ச் சிகளால் உலகத் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நாடு !



                        இந்த கிரேக்க மண்ணில், தலைநகர் ஏதென்ஸில் தான் உலகத்தொழிற்சங்க சம் மேளனம் (றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே-றுகுகூரு) நடத்திய 16வது உலகத் தொழிற்சங்க மாநாடு ஏப்ரல் 6 முதல் 10வரையிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.



மாநாட்டுப் பின்னணி

தொழிற்சங்கங்களை உலகரீதியாக ஓரணி யில் திரட்டி, பாசிசத்திற்கு எதிராகவும், ஏகாதி பத்திய, முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு எதி ராகவும் வர்க்க ரீதியான பார்வையுடனும், சமூக மாற்றத்திற்காகவும் போராடும் நோக்கோடு 1945ல் துவங்கப்பட்டது உலகத்தொழிற்சங்க சம்மேளனம். 1945 அக்டோபர் 3 முதல் 10வரையிலும் பாரீஸ் நகரில் இதன் அமைப்பு மாநாடு நடைபெற்றது. அக்டோபர்3, அமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு மிக்க பணிகள், போராட்டங்கள், ஒருமைப் பாடு இயக்கங்கள் என புரட்சிகர பாரம்பரியம் கொண்ட சம்மேளனம், உலகளாவிய தத்து வார்த்த சருக்கல் காலங்களில் முந்தைய வர்க்கப்பார்வையுடனான செயல்பாடுகளில் பலவீனங்களைக் கண்டது. 1990ம் ஆண்டு களுக்கு பிறகு, சம்மேளனப் பணிகள், பல் வகை நெருக்கடிகளைச் சந்தித்தது.

உலகளாவிய அரசியல் பலாபலங்களில் வந்த பாதகமான மாறுதல்களால், உலக முத லாளித்துவ சக்திகளின் பேராதரவோடு, சீர் திருத்தவாத தொழிற்சங்கங்களின் உலகளா விய பணிகள் ஒருமுகப்படுத்தப்பட்டன. வர்க்கப்போராட்டங்களின் வரலாறு முடிந்து விட்டது என மூலதன சக்திகள் கொக்கரிக்கத் துவங்கின. இந்த சூழ்நிலைகளின் பாதிப்பு களை 1990ம் ஆண்டு மாஸ்கோவில் நடை பெற்ற 12வது மாநாட்டில் நேரடியாக உணரும் வாய்ப்பும் எனக்கும் கிடைத்தது.

13வது, 14வது மாநாடுகள் ( டமாஸ்கஸ், புதுதில்லி) நிலைமைகளை மாற்ற உதவ வில்லை. ஆனால் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் 2005ல் நடைபெற்ற 15வது மாநாடு, புதிய பாதையிலான பயணத்திற்கு வித்திட்டது. கடந்த 5 ஆண்டுகள், புரட்சிகர வர்க்கப்பாதையில், சுரண்டலற்ற புதிய உலகம் எனும், ஆரம்பகால லட்சியப்பார்வையை முன் னிறுத்தி செயல்பட்ட காலமாக இருந்தது. 15வது மாநாட்டில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட, கிரேக்க நாட்டின் ‘பாமே’(ஞஹஆநு) எனும் போர்க் குணமிக்க அமைப்பைச் சார்ந்த தோழர் ஜார்ஜ் மாவ்ரி கோஸ் உட்பட்ட தலைமைக்குழுவின் பணி கள், சம்மேளனத்தின் விஸ்தரிப்புக்கும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுத்தது.
சிஐடியுவின் இணைப்பு

அமைக்கப்பட்ட நாள் முதல் சம்மேளனத் தோடு தோழமையுடன் செயல்பட்டாலும், சிஐடியு, சம்மேளனத்துடன் இணைய வில்லை. சம்மேளனத்தின் கொள்கை நிலை பாடுகள்தான் சிஐடியு இந்த நிலையை மேற் கொள்வதற்கான காரணமாக இருந்தது.
15வது மாநாட்டுக்குப்பின் ஏற்பட்ட மாறு தல்களின் பின்னணியில் சிஐடியு, இணைப்பு பிரச்சனையை மறுபரிசீலனை செய்தது. சிஐடியுவின் சண்டிகர் மாநாட்டில் பங்கேற்ற சம்மேளனப் பொதுச்செயலாளர், சிஐடியு தலைமையுடன் விரிவாக விவாதித்தார். 2010 அக்டோபர் - நவம்பரில் சிஐடியு பிரதிநிதிகள் குழு ஏதென்ஸ் சென்று விவாதங் களைத்தொடர்ந்தது. சிஐடியுவை, உலகத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைப்ப தென்று சிஐடியு செயற்குழு, நிர்வாகக்குழு, பொதுக்குழு என முறையாக விவாதித்து முடிவு செய்தது.

இணைப்பை உறுதிப்படுத்த, தோழர் மாவ்ரிகோஸ் மார்ச் 12 அன்று சிஐடியு தலை மையகத்துக்கு வருகைபுரிந்தார். இந்தப் பின்னணியில்தான் சிஐடியுவின் 20 பிரதி நிதிகள் கொண்ட குழு, 16வது மாநாட்டில் பங் கேற்றது.

உற்சாகப் பெருவிழா



ஏப்ரல் 6மாலையில், ஏதென்ஸ் நகரில் ஃபலீரோ காம்ப்ளக்சிலுள்ள பிரம்மாண்ட விளையாட்டரங்கில் துவக்கவிழா நடை பெற்றது. விளையாட்டரங்கின் இருப்பிடங்கள் நிரம்பி வழிய, ஏதென்ஸ் நகரின் தொழிலாளர் களும், இளைஞர்களும் அணிதிரண்டனர். சம்மேளனத்தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் தலைமையில் பிரதிநிதிகள், அரங் கிற்குள் அணிவகுத்து வர, உரக்க கோஷங் களை எழுப்பியும், பதாகைகளை அசைத்தும் வரவேற்ற நிகழ்வு உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்து சேர்ந்த பிரதி நிதிகளை பெரிதும் உணர்ச்சிவசப்படுத் தியது.



பாரம்பரிய இசைப்பாடல்களுக்குப்பின், சம்மேளனத்தின் 65 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பை, பிரம்மாண்ட திரைகளில் ஒளிபரப்பினார்கள்.



வர்க்கப்போராட்டம், சர்வதேச ஒரு மைப்பாடு, ஜனநாயகம்,ஒற்றுமை ஆகிய வற்றோடு, நவீன செயல்பாட்டு முறை யையும் இணைத்த கோஷங்கள் எங்கும் எதிரொலித்தன. விழாமேடையிலும், அரங்கம் முழுவதும் பன்மொழிகளில் இதே கோஷங்கள் பொறித்த பதாகைகள் நிரம்பியிருந்தன.



பங்கேற்ற பிரதிநிதிகள் பற்றிய சுருக்க மான விபரங்களை இந்தியாவிலிருந்து வந்த பெண் பிரதிநிதியொருவர் அறிவிக்க, தென் அமெரிக்க பிரதிநிதியொருவர் இரங்கல் - அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிய, சம் மேளனத்தலைவர் தலைமையில் சம் மேளனத் தலைமைக்குழு உறுப்பினர்களு டன் மக்கள் சீனத்தின் ஏசிஎப்டியு (ஹஊகுகூரு) பிரதிநிதி மற்றும் சிஐடியுவின் அகில இந்திய செயலாளர் டாக்டர் கே.ஹேமலதா உட்பட தலைமைக்குழுவினர் பொறுப் பேற்றனர்.



கிரேக்கத்தின் ‘பாமே’யின் பொதுச்செய லாளர் ஜார்ஜ் பெரோஸ் வரவேற்புரையாற் றினார். சம்மேளனத்தலைவரும் சிரியா நாட்டைச் சார்ந்தவருமான முகமது ஷாபான் அசூஸ் தலைமை உரையாற்றினார். துவக்க உரையாற்றிய பொதுச்செயலாளர், ‘ஏகாதி பத்தியத்திற்கும் மூலதனத்திற்கும் எதிராக நமது ஒன்றுபட்ட போராட்டத்தை முன் னெடுத்துச்செல்ல இந்த மாநாடு வர்க்கப் பார்வையுடன், ஜனநாயகப்பூர்வமாகவும் பகிரங்கத்தன்மையுடனும் செயல்படும்’ என் பதை தெளிவுப்படுத்தினார்.



கிரேக்க நாட்டின் துணை ஜனாதிபதி, அட்டிக் எனும் மாநிலத்தின் ஆளுனர், ஏதென்ஸ் மற்றும் பியரஸ் நகர மேயர்கள் வாழ்த்துரை வழங்கினர்.



கிரேக்க ஜனாதிபதியின் வாழ்த்துரை படிக்கப்பட்டது. வேலையின்மையும், கடுமை யான பாதுகாப்பின்மையும் நிறைந்த சூழலை கிரேக்கம் சந்தித்து வருவதாக அவரது வாழ்த் துச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.



பிரதிநிதிகள் மாநாடு



சம்மேளனத்தலைவருடன், பல்வேறு நாடுகளைச் சார்ந்த தலைவர்களும் உள் ளடங்கிய தலைமைக்குழு ஒவ்வொரு நாளும் தேர்வு செய்யப்பட்டது.



பிரதிநிதிகள் மாநாட்டின் துவக்க நாளில் சிஐடியுவின் சார்பில் ஏ.கே.பத்மநாபன் தலை மைக்குழுவில் இடம் பெற்றார். தொடர் நிகழ்வு களில் சிஐடியு துணைத்தலைவர் சுகுமால் சென், எஸ்.தேவ்ராய் ஆகியோரும் தலை மைக்குழுக்களில் இடம்பெற்றனர்.



கடந்த மாநாட்டுக்குப்பின் நடைபெற்ற பணிகள் பற்றிய அறிக்கை ஏழு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆங் கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், அரபு, ரஷியன், போர்த்துகீஸ் மற்றும் கிரேக்க மொழிகளில் மாநாட்டு நிகழ்ச்சிகள் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. எவ்வித சிரமமும் இன்றி, பிரதிநிதிகள் அனை வரும் மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க முடிந்தது சிறப்பானதாகும்.



நடைபெற்ற பணிகள் பற்றிய அறிக்கை யின் சுருக்கம், வீடியோ காட்சியாக, பெரிய திரையில் ஒளிபரப்பினர்.



மாநாட்டின் அடிப்படை ஆவணமாக “ஏதென்ஸ் பிரகடனம்”(ஹகூழநுசூளு ஞஹஊகூ) பொதுச் செயலாளரால் முன்மொழியப்பட்டது.



இந்த பிரகடனத்தின் நகல் முன்கூட் டியே வெளியிடப்பட்டு, உலகம் முழுவது மிருந்தும் 1085 ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றதை குறிப்பிட்ட அவர், பிரதிநிதிகள் ஆக் கப்பூர்வ விவாதத்தின் மூலம் ஆவணத்தை வலுப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.



சர்வதேச பொருளாதார நெருக்கடி, தொழி லாளர் மற்றும் மக்கள் மீதான தாக்கங்கள், அதையொட்டி நடைபெறும் போராட்டங் களின் தன்மைகள், திட்டமிட்டும் ஒருமுகப் படுத்தப்பட்டும் போராட்டங்களை நடத்த வேண்டியதன் அவசியம், முற்றிவரும் தொழி லாளர் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வழி முறைகள், வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம், பெண்கள், இளை ஞர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களையும் திரட்டுதல், பிறநாடுகளிலிருந்து வரும் தொழி லாளர்களை திரட்டுதல் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங் களை வலுப்படுத்தல் என முக்கிய அம்சங் களை ஆவணம் முன்வைத்தது.



இதையெல்லாம் நிறைவேற்ற, சம்மே ளனத்தை வலுப்படுத்துவது, பிராந்திய வாரி யாகவும் தொழில் வாரியாகவுமான செயல் பாடுகளை விரிவாக்குவது, உறுதிப்படுத்துவது என கடமைகளை ஆவணம் வலியுறுத்தியது.



வாழ்த்துரைகள்



ஐ.நா.சபையின் தலைமைச்செயலாளர் பான்கிமூன் மற்றும் கியூபா, பொலிவியா, சிரியா, பாலஸ்தீனம், சைப்பரஸ் நாட்டு ஜனாதிபதிகள் வாழ்த்துச்செய்திகளை அனுப்பியிருந்தனர்.



சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐடுடீ), சீனத்தொழிற்சங்க சம்மேளனம் (ஹஊகுகூரு), ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளின் தொழிற்சங்க கூட்டமைப்புகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் உலக அமைப்புகள் மற்றும் உலக அமைதி கவுன்சில் சார்பில் வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன.



விவாதம்



மாநாட்டு பிரகடனத்தின் மீதான விவாதம், அனைத்து கண்டங்களிலும், அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்தியம்பும் அரங்கமாக இருந்தது. நாடுகளும், மொழிகளும் அமைப்பு களும் வேறுபட்டாலும் நூற்றுக்கு மேற்பட் டோரின் பேச்சுகள், இன்றைய முதலாளித் துவ நெருக்கடி மற்றும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களின் பொதுத்தன்மையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.



வேலையின்மை, ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு, ஓய்வூதியம் பறிப்பு, வேலைநேர அதிகரிப்பு, ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு, தொழிற்சங்க உரிமை-கூட்டுப்பேர உரிமை பறிப்பு என துவங்கி தொழிற்சங்க தலைவர் கள், ஊழியர்களை சிறைப்படுத்துதல், படு கொலைகள் வரையிலுமான பொதுப்பிரச் சனைகளும், ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள், அரங்கவாரி மற்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றுடன் மூன்றுமுறை சர்வதேச கிளர்ச்சி தினங்கள் அனுசரிக்கப் பட்ட விபரங்களும் இந்த பொதுத்தன்மையை வெளிப்படுத்தியது.



சிஐடியுவின் சார்பில் ஏ.கே.பத்மநாபன், எரிசக்திக்கான சர்வதேச தொழிற்சங்க கூட் டமைப்பின் சார்பில் அதன் தலைவரும், சிஐ டியு செயலாளருமான எஸ்.தேவ்ராய் உட்பட இந்தியாவிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் 6 பேர் விவாதத்தில் பங்கேற்றனர்.



பெண் பிரதிநிதிகள் கூட்டம்



உழைக்கும் பெண்களின் ஒருங்கிணைப்பை உலகளாவிய முறையில் வலுப்படுத்தும் நோக் கோடு, பெண் பிரதிநிதிகளின் கூட்டம் தனி யாக நடத்தப்பட்டு, தொடர் நடவடிக்கை களுக்கு திட்டமிடப்பட்டது. மொத்தமுள்ள பிரதிநிதிகளில் பெண்கள் 30சதவீதமாகும்.



இதேபோன்று ஆசிய-பசிபிக், ஐரோப்பா, அமெரிக்கா,ஆப்பிரிக்கா என மண்டல வாரி யாக அனைத்து பிரதிநிதிகள் கூட்டங்களும் நடைபெற்றன. பொதுச்செயலாளர் தொகுப்பு ரையோடு பிரகடனம் ஏற்கப்பட்டது.



சம்மேளன விதிகளிலும், நோக்கம் குறித்த முன்னுரை குறிப்பிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டதை புதிய செயற்குழு இறுதிப்படுத்துவதென முடிவாயிற்று.



புதிய நிர்வாகிகள்



42 உறுப்பினர்கள் கொண்ட தலைமைக் குழுதான் சம்மேளனத்தின் உயரிய அமைப்பு. தலைமைக்குழு தேர்வுக்கு முன் பொதுச்செய லாளராக ஜார்ஜ் மாவ்ரிகோஸின் வேட்புமனு மட்டும் தான் தாக்கலாகியிருந்ததால், அவர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். தலைவ ராக, தற்போதைய தலைவர் முகமது ஷாபான் அசூஸ் அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டார்.



மேலும், தலைமைக்குழுவிற்காக 40 பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 40பேர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றாலும், ரகசிய வாக்குகளை பதிவு செய்யும் முறை அமலாக் கப்பட்டது. 5பேர் கொண்ட நிதி ஆய்வுக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. தலைமைக் குழுவில் 5 பேர் பெண்கள்.



இவர்களுடன் தொழில்வாரி கூட்டமைப்பு களின் பொதுச்செயலாளர்களும், மண்டல அலுவலக பொறுப்பாளர்களும் தலைமைக் குழு கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார்கள். கட்டுமானத் தொழிலுக்கான உலக கூட்ட மைப்பின் பொதுச்செயலாளராகியுள்ள தீ பஞ்சன் சக்கரவர்த்தி இதில் இடம் பெறுகிறார்.



புதிய தலைமைக்குழு கூடி 17துணைத் தலைவர்களையும், 7பேர் கொண்ட செயற் குகுழுவையும் தேர்வு செய்தது. செயற்குழு வில் கியூபாவிலிருந்துள்ள பெண் தோழர் ஓசீரிஸ் ஓவிடோ தொடர்கிறார்.



சிஐடியுவிலிருந்து ஏ.கே.பத்மநாபன் துணைத்தலைவராகவும், எஸ்.தேவ்ராய் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஏஐடியுசியிலிருந்து தலைவர் பிரமோத் கோகோய் துணைத்தலைவராகவும், எச்.மகாதேவன் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏஐபிஈஏ பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் நிதிக்குழு உறுப்பினராக உள்ளார்.



ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெ ரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களின் 101 நாடு களிலிருந்து பங்கேற்ற 881 பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் புதிய உணர்வோடும் போராட்ட வேகத்தோடும் உணர்ச்சி பொங்க சர்வதேச கீதம், பல மொழிகளிலுமாய் முழங்க, 16வது உலக தொழிற்சங்க மாநாடு சிறப்புற நிறைவு பெற்றது.



முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனங் களுக்கு எதிராக, சுரண்டலற்ற புதிய உலக மெனும் உலக தொழிற்சங்க சம்மேளன முழக் கம், வரும் நாட்களில் வீறுகொண்டு உலக மெங்கும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை எங்கும் பிரதிபலித்தது.
source: theekkathirnews.blogspot.com