CLICK TO VISIT LATEST POSTS

Monday, May 2, 2011

தமிழகத்தில் மேதினம் -ஆதி



அமெரிக்காவில் 1880ம் ஆண்டுகளில் எட்டு மணி நேர வேலைக்கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தங்கள் நடைபெறுவதற்கு முன்பே, 1862ம் ஆண்டில் இந்த கோரிக் கைக்காக ஹெளராவில் ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுதான்இந்தியாவில் நடந்த முதல் வேலை நிறுத்தப்போராட்டம்.

தமிழகத்தில், சென்னை பெரம்பூர் ரயில்வே பணிமனை யைச் சேர்ந்த 3000 தொழிலாளர்கள் 1893ம் ஆண்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தேச விடுதலைப் போராட்டத்துடன் சேர்ந்து, தொழிலாளர் வேலை நிறுத்தங்களும் நிறைய நடைபெற்றன. இவற்றில் பரவலாக திரு.வி.க., வ.உ.சிதம்பரனார், சிங்காரவேலர் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

1908ம் ஆண்டு தூத்துக்குடியில் கோரல் மில் தொழிலாளர் கள் போராட்டம் நடைபெற்றது. அங்கு பணிபுரிந்த 1695 தொழிலாளர்களில் பெரும்பாலானோர் 16 வயதிற்கு உட் பட்டவர்கள். அதாவது உங்களைப் போன்ற சிறுவர்கள். அவர் கள் ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் உழைக்க வேண்டியிருந் தது. இவர்களிடையே பிப்ரவரி 23ஆம் நாள் வ.உ.சிதம்பரனார் எழுச்சிமிக்க உரையாற்றினார். இதையடுத்து வேலைநிறுத்தம் தொடங்கியது. வேறு வழியின்றி ஆலை நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வந்தது. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, வேலை நேரம் குறைப்பு வாரம் ஒரு நாள் விடுமுறை போன்ற உரிமைகளை வழங்கியது.

‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ எனும் தொழிற்சங்கத்தை ராமாஞ்சலு, செல்வபதி ஆகியோர் வாடியா, திரு.வி.க. ஆகி யோருடன் இணைந்து 1918ம் ஆண்டு ஏப்ரல் 27ம் நாள் தொடங்கினர். தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட தமிழகத்தில் தோன்றிய முதல் தொழிற்சங்கம் இதுதான்.

தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைத் தலைவர் என்று சிறப்பிக்கப்படும் சிங்காரவேலர், 1923ம் ஆண்டு மே தினத்தைக் கொண்டாடத்திட்டமிட்டார். அந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் எதிரே இருந்த கடற்கரையிலும், கிருஷ்ணசாமி தலைமையில் திருவல்லிக்கேணி கடற்கரை யிலும் மேதினக்கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. இவைதான் இந்தியாவின் முதல் மேதினக் கொண்டாட்டங் களாகக் கருதப்படுகின்றன.