CLICK TO VISIT LATEST POSTS

Saturday, April 21, 2012

RMS EMPLOOYEES ON DHARNA AT TIRUCHY

திருச்சி, ஏப். 18: கடிதம் பிரிக்கும் அலுவலகத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, ஆர்எம்எஸ் ஊழியர்கள் சங்கத்தினர் திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அஞ்சல் துறையின் பல்வேறு சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி மற்றும் ஆர்எம்எஸ் அலுவலகங்களை மூடும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். திருச்சி ஆர்எம்எஸ் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கடிதங்களை அந்தந்த மாவட்டத்திலேயே பிரித்து அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு உணவு மற்றும் ஓய்வு அறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கடிதங்களைப் பிரித்து அனுப்பும் பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்னா போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் திருச்சி கிளை தலைவர் கே. செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் ஆர். குணசேகரன், பொருளாளர் எம். பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

news courtesy:  தினமணி திருச்சி  dt 19.04.2012