CLICK TO VISIT LATEST POSTS

Saturday, May 12, 2012

அஞ்சல்துறையில் சுரண்டப்படும் ஊழியர்கள்- N.GOPALA KRISHNAN


                          நமது நாட்டின் அஞ்சல் துறையில், குறிப்பாக கிராமப்புறங்களில் சுமார் 3 லட்சம் இ.டி. ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்கப்படவில்லை. இவர்கள் வேலை நேரம் 3 மணியிலிருந்து 5 மணி நேரம் வரை உள்ளதால், பகுதிநேர ஊழியர்களாக, இலாகா ஊழியர் பெறும் ஊதியத்தில் விகிதாச் சார அடிப்படையில் ஊதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே தனியான சங்கம் அமைப்பதற்கு மத்திய அரசினால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இலாகா ஊழியர் சங்கங்களுடன் இணைந்து செயல் பட்டனர். 1954ல் ஒன்றாயிருந்த தபால், தொலைத்தொடர்பு துறையில், ஊழியர் களுக்கு என்.எப்.டி.டி.இ. என்ற ஒரே சம்மேள னம் அமைக்கப்பட்டு, உயனசந வாரியாக 9 சங் கங்கள் அமைக்கப்பட்ட நிலையில்கூட, தனி சங்கம் மறுக்கப்பட்டது. எனவே இவர்கள் பி-3, பி-4 மற்றும் ஆர்-4 சங்கங்களில் அவர் களின் பணிகளுக்கு ஏற்றவாறு இணைக்கப் பட்டனர். 1986ல் தபால்துறைக்கென்று தனி யாக N.F.P.E சம்மேளனம் உருவாக்கப் பட்டபோதும் இதே நிலைதான் நீடித்தது.

இ.டி. ஊழியர்களுக்குதனிச்சங்கம் உதயமானது

                             பிறகு 1993ல் மத்திய அரசு, அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் (இரயில்வே, பாதுகாப்பு தவிர) சங்கம் அமைப்பதற்கான புதிய அங்கீகார விதிகளை உருவாக்கியது. அப்போது, சம்மேளனம் கிடையாது மற்றும் ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு தனி சங்கம் கிடையாது, இலாகா ஊழியர் சங்கங்களிலும் இணைக்க முடியாது என கூறியது. இதனால் என்.எப்.பி.இ.புதிய அங்கீகார விதிகளை ஏற்காமல் அரசுடனும், நிர்வாகத்துடனும் போராடியது மட்டுமின்றி சட்ட பூர்வமாகவும் முயற்சி செய்தது. அப்போதைய சம்மேளன பொதுச்செயலாளர் தோழர் ஆதி நாராயணா முயற்சியின் காரணமாக தபால்துறை 1995ல் இ.டி. ஊழியர்களுக்கு தனியான சங்கம் அமைக்க ஒப்புக் கொண்டது.
                           சில மாநிலங் களில் இ.டி. சங்கம் அமைப்பதில் அமைப்புச் சிக்கல் ஏற்பட்ட நிலையில் அகில இந்திய சங்கம் அமைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட் டது. இலாகா 1999 ஜனவரிக்குள் அமைக்க வேண்டும் என இறுதியாக கெடு விதித்தது. இந்த சூழ்நிலையில், தோழர் ஆதி நாராயணா, கே.ஜி. போஸ் அணி பெரும்பான்மையாக இருந்தபோதும் இ.டி. ஊழியர்களுக்காக சங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில் மாற்று அணியினரின் நிர்ப்பந்தத் தை ஏற்று, தோழர் எஸ்.எஸ். மகாதேவய்யா வை பொதுச் செயலாளராக ஏற்று 1999 ஜன வரி 19, 20ல் கர்நாடக மாநிலத்தில் கைவாரா வில் இ.டி. ஊழியர்களுக்கான தனியான சங்கம் அமைக்கப்பட்டது.
ஜி.டி.எஸ். ஊழியர்கள் என்.எப்.பி.இ.இருந்தபோது பெற்ற வெற்றிகள்
                      1. என்.எப்.பி.டி.இ. வரலாற்று சிறப்பு மிக்க 1960, 1968 போராட்டங்களில் இ.டி. ஊழியர் களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக் கையை வைத்தது.
                                 2. குறிப்பிட்ட வேலை நேரம், வேலைப் பளு இல்லாத நிலையில் இ.டி. ஊழியர் களுக்கு வேலை நேரம், வேலைப்பளு நிர்ணயம் செய்யப்பட்டது
                              3. இ.டி. ஊழியர்களுக்கு 1983 முதல் போனசும் 1989 போராட்டத்தின் மூலம் வாங் கும் ஊதியத்தின் அடிப்படையில், இலாகா ஊழியர் போன்று போனசும் பெற முடிந்தது.
                             4. இ.டி. ஊழியர்களுக்கு ஒன்றாயிருந்த என்.எப்.டி.டி.இ., அன்றைய பொதுச் செயலா ளர் தோழர் கே.ஜி. குப்தா எந்த போராட்டத் தையும் நடத்த முன்வராத போது, அதே சம் மேளனத்தில் இருந்த தோழர் ஆதி நாராயணா (அஞ்சல் 4 பொதுச் செயலாளர்) 19.9.1984ல் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து, (1968க்கு பிறகு தபால், தந்தி துறையில் நடைபெற்ற முதல் போராட்டம்) இ.டி. ஊழியர்களுக் காகவே நடத்தி இடைக்கால நிவாரணம், இ.டி. ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற கமிட்டி (அரசு அதிகாரி சாவூர் தலைமையில்) ஆகி யவை பெறப்பட்டது. இ.டி. ஊழியர் பிரச்சனை களில் தீர்வுகாண இந்த போராட்டம் ஒரு திருப்புமுனையாகும். இந்த போராட்டத்தின் மூலம்தான் இ.டி. ஊழியர்களுக்கு 1.1.86 முதல் டிஏ., புதிய ஊதிய நிர்ணயம் பெற்று பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது.
                         6. தொடர்ந்து 1992ல் தோழர் ஆதி நாராயணா என்.எப்.பி.இ.சம்மேளனத்தின் பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்ட பிறகு டிசம்பர் 1993ல் ஐபிஓ/ ஏஎஸ்பிஓ சங்கம் உட்பட ஜே.சி.ஏ. மூலமாக தபால் துறையில் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒன் றிணைத்து, மாபெரும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி, இ.டி. ஊழியர் களுக்காக ஓய்வு பெற்ற நீதிபதி திரு. சரஞ்சித் தன்வார் தலைமையில் குழு அமைக்கப்பட் டது.
                                      அதன் பரிந்துரைகள் 1997ல் வெளியிடப் பட்டன. அதன்படி இ.டி. ஊழியர்களுக்கு இலாகா ஊழியர் அந்தஸ்து, விடுப்பு, ஓய் வூதியம், பணிக்கொடை போன்ற அனைத்து இலாகா ஊழியர் சலுகைகளையும் தனது பரிந்துரையில் அரசிற்கு அளித்தது. இ.டி. ஊழியர்களின் பெயரைக்கூட கிராமப்புற அஞ்சல் ஊழியர் (சுரசயட ஞடிளவயட நுஅயீடடிலநந) என மாற்ற வேண்டும் என பரிந்துரை செய் தது. திரு. தல்வார் கமிட்டியின் பரிந்துரைகள் இன்றைக்கும் இ.டி. ஊழியர்களுக்கு கோரிக் கை சாசனமாக உள்ளது எனக் கூறினால் மிகையாகாது.7. திரு. தல்வார் கமிட்டியின் பரிந்துரை களைத் தொடர்ந்து 1998ல் ஜே.சி.ஏ. மூலமாக மீண்டும் 8 நாட்கள் காலவரையற்ற போராட் டம் நடைபெற்றது. முடிவில், 17.12.98ல் இ.டி. ஊழியர்களுக்கு முதன்முறையாக ஊதிய விகிதம் (கூiஅந சநடயவநன உடிவேiரேடிரள ஹடடடிறயnஉந) வருடத்திற்கு 20 நாட்கள் ஊதியத்து டன் விடுமுறை, வருடாந்திர ஊதிய விகிதம், பணிக்கொடை ஆகியவை மத்திய அரசி னால் 17.12.98ல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இ.டி. ஊழியர்களின் பெயர் ஜி.டி. எஸ். (ழுசயஅin னுயடம ளுநஎயம) என மாற்றப்பட்டது.எனவே, மேற்குறித்த அனைத்தும் 1999க்கு முன்பு பெறப்பட்ட சலுகைகள் / வெற்றிகள் ஆகும்.
1999க்குப் பிறகு ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு தனிச் சங்கம் அமைத்த பிறகு...?
                                          மத்திய அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக்குழு அமைக்கப்பட்ட பின்னணியில், ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கும், அதேபோல் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும் என என்.எப்.பி.இ. கோரியபோது, மத்திய அரசு, தபால்துறை ஓய்வுபெற்ற அதிகாரி நடராஜ மூர்த்தி தலை மையில், கமிட்டி அமைத்தது. இதை சங்கப் பொறுப்பிலிருந்த மகாதேவய்யா என்எப்பிஇ அமைப்புக்கே தெரியாமல் ஏற்றுக்கொண்டு ஒரு முறை நேரில் சென்று சாட்சியம் அளித்துவிட்டார். பிறகு என்எப்பிஇ-யும் வேறு வழியின்றி அதே கமிட்டியின் முன்பு கோரிக்கைகள் குறித்து சாட்சியம் அளித்தது.அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக் கும் 50 சதவீத பஞ்சப்படி இணைப்பு 2004ல் வழங்கப்பட்ட பிறகும் ஜி.டி.எஸ். ஊழியர் களுக்கு பஞ்சப்படி இணைப்பு வழங்கப்பட வில்லை. என்எப்பிஇ-யின் முயற்சியால்தான் 5 சதவீத அடிப்படை ஊதியத்தில் உயர்த்தி ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. இது என்எப்பிஇ-யின் தொடர் போராட்டம், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் பிரதமருடன் பேசி - கடிதம் கொடுத்து, சிபிஎம் எம்.பி. தோழர் பாசுதேவ் ஆச்சார்யா மீண்டும் என்.எப்.பி.இ. தலைவர்களுடன் பிரதமரை சந்தித்த பிறகு அளிக்கப்பட்ட உத்தரவே ஆகும்.இந்த காலத்தில்தான் நடராஜமூர்த்தி கமிட்டி பரிந்துரைக்கு பிறகு ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு போனஸ் கணக்கீடு தொகை 2009 முதல் 3500லிருந்து 2500ஆக குறைக்கப்பட்டது.ஜி.டி.எஸ். ஊழியர்களை தபால்காரர் களாக ஆகின்ற வாய்ப்புகளில் 25சதவீதம் குறைக்கப்பட்டு வெளியார் நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது என்.எப்.பி.இ.யின் முயற்சியினால் மறு பரி சீலனை செய்யப் படவுள்ளது.இதுபோன்ற பாதிப்புகள், கடந்த 6 ஆண்டுகளில் ஜி.டி.எஸ். ஊழியர் மேல் மத் திய அரசின் புதிய நவீன பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கத்தில் தொடரும் தாக்குதல்களே ஆகும்.

என்.எப்.பி.இ. தலைமையில் தனிச் சங்கம் அவசியம் ஏன்?

                                  அஞ்சல் துறையில் சரிபாதி ஊழியர் களை கொண்ட ஜி.டி.எஸ். அமைப்பில், மத் திய அரசின் நவீனமய, பொருளாதாரக் கொள் கைகளின் விளைவாக, கடுமையான தாக்கு தல்கள் தொடர்ந்து அந்த ஊழியர்கள் மீது நடத்தப்படுகிறது. ஒருபுறம் பல ஆண்டு களாக போராடி வெற்றிபெற்ற சலுகைகள் ஒன்றன்பின் ஒன்றாக பறிபோய்க் கொண்டுள் ளது. ஏற்கனவே வைக்கப்பட் டுள்ள கோரிக் கைகள் நிலுவையில் உள்ளன. மேலாக, ஜி.டி.எஸ். ஊழியர்களை இலாகா ஊழியர் ஆக்கும் முக்கிய கோரிக்கை இன்னும் கன வாகவே உள்ளது.அடுத்து, அவர்கள் அடிப்படை பணிக்கே வேட்டு வைக்கும் நிலையில, காஷூவல் ஊழியர்களாக மாற்ற நடவடிக்கைகளை அமல்படுத்த அரசு முனைந்துள்ளது. மறுபுறத் தில், ஜி.டி.எஸ். சங்க தலைமை பரந்த ஒற்று மையைக் கட்டி, போராடி அரசின் இந்த தாக்கு தல்களை முறியடிக்காமல், தன்னிச்சையான முறையில் சங்கத்தை நடத்தினால் ஊழியர் நலனைப் பாதுகாக்க முடியாது. மேலும் பாதிப்புகள்தான் தொடரும். அதுவும் தற் போதைய காலகட்டத்தில், மத்திய அரசின் மோசமான தாக்குதல்களை எந்த அளவிற்கு பரந்த ஒற்றுமையைக் கட்டி போராட முடி யுமோ, அப்போதுதான் பாதிப்புகளை தடுக்க முடியும், களைய முடியும். அதன் தொடர்ச்சி தான் சென்ற 28.02.12ல் நடைபெற்ற போராட்டம் ஆகும். அடுத்து, இவ்வளவு பெரிய அமைப்பில், கீழ்மட்டம் முதல் மேல் மட்டம் வரையில் தொழிற்சங்க ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தொழிற்சங்க ஜனநாயகம் மிதி படும்போது, தொடர்ந்து அதை தொடர்கதை யாக அமல்படுத்தும்போது கட்டுக்கோப்பு நிச்சயம் கடுமையாக பாதிக்கும்.
                                 ஊழியர் பிரச்சனைகளுக்காக ஒன்று பட்ட போராட்டமும் ஒற்றுமைப்படுத்த தொழிற்சங்க ஜனநாயகமும் அவசியம்எனவே, எந்த அமைப்பும் ஒன்றுபட்டு சிறப்பாக செயல்பட, ஜனநாயக முறைப்படி அதை வழி நடத்துவது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லாதபோது பெரும்பான்மை ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப போரா டும் அமைப்பு ஒன்று உருவாவது தவிர்க்க முடியாது. தொழிற்சங்க ஜனநாயகத்தை உறுதிப்படுத்த, சமரசமற்ற முறையில் இந்த சங்கம் செயல்படும். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையினை உயர்த்திப் பிடிக்கும்.என்.எப்.பி.இ. சங்கத்தை பலப்படுத்து வோம்! ஜி.டி.எஸ்.பிரச்சனைகளை தீர்க்க ஒன்றுபட்டு போராடுவோம்!! வெற்றிபெறு வோம்!!!

கட்டுரையாளர் , அகில இந்திய செயல் தலைவர் - பி3 - என்.எப்.பி.இ.