CLICK TO VISIT LATEST POSTS

Tuesday, July 31, 2012

தில்லியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து மாபெரும் தேசிய சிறப்பு மாநாடு !


10 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத் திட்டத்தை வகுக்க - 2012 செப்டம்பர் 4ம் தேதி தில்லியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து மாபெரும் தேசிய சிறப்பு மாநாடு !
10 கோரிக்கைகள்
தொழிலாளி வர்க்க மக்கள் சற்றேனும் மீட்சிபெற மத்திய தொழிற்சங்கங்கள் 10 முக்கிய கோரிக்கைகளை இடைவிடாமல் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கைகளை மையப்படுத்தியே கடந்த பிப்ரவரி 28ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க பொது வேலை நிறுத்தத்தை அனைத்து சங்கங்களும் கூட்டாக இணைந்து வெற்றிகரமாக நடத்தின. 10 கோடி மக்கள் இந்த மகத்தான போராட்டத்தில் பங்கேற்றனர்.அதே கோரிக்கைகளை மீண்டும் மத்திய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
  • கவுரவ ஊதியர்கள், தொகுப்பூதியர்கள் உள்பட அனைத்துவகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் மாதச்சம்பளம் ரூ.10ஆயிரம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்;
  • தொழிலாளர் சட்டங்கள் உறுதியான முறையில் அமலாக்கப்பட வேண்டும்;
  • சங்கங்கள் அமைப்பதற்கும், குறிப்பிட்ட வரையறைக்குள் பதிவு செய்வதற்குமான தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.
  • அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தொழிலாளர் உருவாக்கும் தொழிற்சங்கங்களை அந்நிறுவனங்கள் அவசியம் அங்கீகரிக்க வேண்டும்;
  • அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் வேலை நேரம் 8 மணிநேரமாக வரையறை செய்யப்பட வேண்டும்;
  • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரேவிதமான பணிக்கு ஒரேவிதமான கூலி வழங்கப்பட வேண்டும்;
  • பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
என்பதுள்ளிட்ட கோரிக்கைகளையும், பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையும் 2012 ஜூலை-11 புதனன்று தில்லியில் பி.எம்.எஸ். சங்க தலைமையகத்தில் பி.எம்.எஸ்., ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, எல்பிஎப் மற்றும் சேவா ஆகிய மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டம்  வலியுறுத்தியுள்ளது.