CLICK TO VISIT LATEST POSTS

Monday, August 13, 2012

railways


                      தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஜூலை 30 திங்கட்கிழமை அதிகாலையில் ஒரு பயங்கர தீ விபத்தைச் சந்தித்தது. அன்று காலை 4.18 மணிக்கு நெல் லூரை தாண்டியதும் எஸ் 11 பெட்டியில் இந்த விபத்து ஏற் பட்டது. ரயில்வே கேட்டில் இருந்த ஊழியர் தீச்சுவாலை களைப் பார்த்துவிட்டு நெல் லூர் ரயில் நிலையத்திற்குத் தக வல் கொடுத்தார். பயணி ஒரு வர் அலாரம் செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். திறக்க முடிந்த ஒரே கதவு வழி யாகவும் பெட்டிகளுக்கிடையே இருக்கும் இணைப்பின் வழி யாகவும் சிலர் உயிர் தப்பினர். வெப்ப மிகுதியால் மூன்று கத வுகள் இறுகிக் கொண்டதால் அவற்றைத் திறக்க முடியவில் லை. எஸ் 11 பெட்டி முழுவ தும் கருகிச் சாம்பலானது. 32 பேர் அன்று உயிரிழந்தனர். பின்னர் மருத்துவமனையில் இருவர் காலமானதைச் சேர்த் தால் பலியானோர் எண்ணிக் கை 34 ஆகிறது. முதலில் பயங்கரவாதி களின் நாசவேலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆராயப்பட்டது. ஆனால் ஆரம்பகட்ட புல னாய்வு, தடயவியல் சோதனை களில் பெட்டியில் வெடிமருந்து இருந்ததற்கான சான்று கிடைக் கவில்லை.
                வெடிகுண்டு வைக் கப்பட்டதற்கான தடயமும் கிட்டவில்லை. கிடைத்திருக் கும் சான்றுகளின்படி, கழிப் பறை அருகிலிருந்து மின்சார இணைப்பில் ஏற்பட்ட குறுக்கு மின் பாதை (ளாடிசவ உசைஉரவை) காரணமாகக் கிளம்பிய தீச் சுவாலைதான் விபத்திற்குக் காரணம் எனக் கருதப்படு கிறது. நல்ல வேளையாக, பல மான காற்று வீசாததாலும், ரயில் வண்டி உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டதாலும் பக்கத்திலுள்ள பெட்டிகளுக்கு நெருப்பு பரவவில்லை.இதற்கு முன் நடந்த ரயில்வே விபத்துகள் பற்றி பல கமிஷன் கள் ஆராய்ந்து பயணிகள் பாது காப்பு பற்றி பக்கம் பக்கமாக அறிக்கைகளைக் கொடுத்துள் ளன. விபத்துகள் நடைபெற் றதற்கான காரணங்களை அறிந்தபின்னரும் அவற்றைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை ரயில்வேத் துறை எடுக்காததினால்தான் மீண்டும் மீண்டும் விபத்துகள் நிகழ்கின்றன. அரசின் அலட்சியத்திற்குப் பலி யாவது பயணிகள்தான். இந்த விபத்து பற்றியும் மற்றுமொரு அறிக்கை தயாராவதில் என்ன பயன்? ஏற்கனவே உள்ள அறிக் கைகள் மீது ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தாலே போதுமானது
                . ரயில் தண்ட வாளத்தை விட்டு கீழிறங்கு வது, இரண்டு ரயில்கள் மோதிக் கொள்வது, ஆளில் லாத ரயில்வே கேட்டுகள் உயி ரிழப்பிற்குக் காரணமாக இருப் பது, பெட்டிகளில் தீப்பிடிப் பது போன்ற பல்வேறு கார ணங்கள் விலாவரியாக அலசப் பட்டு விபத்துகளைத் தடுப்ப தற்கான எண்ணற்ற பரிந்துரை கள் முந்தைய அறிக்கைகளில் கொடுக்கப்பட்டு விட்டன. ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பு வது, ரயில் வண்டியில் உள்ள அலுவலர்களுக்கும் ரயில்வே நிலையங்களுக்கும் இடையே தகவல் தொடர்பை வலுப் படுத்துவது, ஒவ்வொரு பெட் டியிலும் பயணிகளை எச்சரிக் கும் ஒலிபெருக்கிகளை அமைப்பது.சிக்னல் அமைப் பை நவீனப்படுத்துவது, மின் இணைப்புகளை அடிக்கடி கண் காணித்துப் பராமரிப் பது, காலாவதியான ரயில்வே பெட்டி களை அகற்றிவிட்டு புதிய பெட்டிகளை இணைப்பது, ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கவல்ல அறிவியல் சாதனங் களைப் பொருத்துவது, பெட் டிகளில் தானியங்கி முறையில் செயல்படக் கூடிய தீ, புகை எச் சரிக்கைக் கருவிகளைப் பொருத்துவது, தீயணைப்புக் கருவிகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது, அவற்றைப் பயன்படுத்தும் முறை பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வது, புகை போக்கிகளை அமைப்பது, ரயில் பெட்டி களின் மேலே உள்ள தண்ணீர் தொட்டிகளில் உள்ள தண்ணீ ரை ஆபத்து காலங்களில் உடனே பயன்படுத்தவல்ல ஏற்பாடு களைச் செய்வது, கதவுகள் திறக்க முடியாமல் இறுகிக் கொள்வதைத் தடுப்பது, பெட் டிகளில் அளவுக்கதிகமான கூட்டம் சேராமல் தடுப்பது, எந்த எரிபொருளையும் ரயி லில் எடுத்துச் செல்லக் கறா ராகத் தடைவிதிப்பது, தீப்பிடிக்காத பொருள்களைக் கொண்டு, பெட்டிகளையும் இருக்கைகளையும் தயாரிப் பது, இருப்புப் பாதைகளை யும், பாதையில் உள்ள பாலங் களையும் பராமரிப்பது போன்ற பல்வேறு நடவடிக் கைகளை போர்க்கால அவ சரத்துடன் செயல்படுத்தினால் எதிர்காலத்தில் விபத்துகளை நிச்சயம் தவிர்க்க முடியும். ரயில்வேத் துறையைத் தனி யார்மயமாக்கும் முயற்சிகளை அரசு அறவே கைவிடுவதும் முக்கியமானது.இத்தனை உயிர்களைப் பலி கொடுத்த பிறகாவது அரசு விழித்துக் கொள்ளுமா