1947
- இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, மதவெறி உணர்ச்சிகள் கொழுந்து
விட்டெரிந்தன. பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது சகாக்களிடம்
இந்தியாவை ஓர் இந்து நாடு என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று கடுமையான
நிர்ப்பந்தம் அளிக்கப் பட்டது. ஏனெனில் பாகிஸ்தான் தன்னை ஓர் இஸ்லாமிய நாடு
என்று அறிவித்துவிட்டதாம்.ஆயினும் நம் தலைவர்களின் பெருந்தன்மை காரணமாக,
அவர்கள் அவ்வாறு அறிவிக்கவில்லை. ‘‘இந்தியா ஓர் இந்து நாடு அல்ல, மாறாக
அது ஒரு மதச்சார்பின்மை நாடு’’ என்று கூறினார்கள். அதனால்தான்,
ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, நம் அண்டை நாட்டார்களைவிட நாம் அனைத்து
விதங்களிலும் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம். மதச்சார்பின்மை என்பதன்
பொருள், ஒருவர் தன் மதத்தைப் பின்பற்றக்கூடாது என்பது அல்ல. மதச்சார்பின்மை
என்பதன் பொருள், மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும்
சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது. என் கருத்தின்படி,
மதச்சார்பின்மை ஒன்றே நம் நாட்டை ஒற்றுமையுடன், வளமான இந்தியாவிற்கான
பாதையில் முன்னோக்கிச்செல்ல, சிறந்த கொள்கையாகும்.
-
-
நீதிபதி மார்கண்டேய கட்ஜு
ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்றம், புதுடெல்லி
உச்ச நீதிமன்றம், புதுடெல்லி