CLICK TO VISIT LATEST POSTS

Monday, November 5, 2012

ஊக்குவிப்புத் தொகை & சுமை

      
பணக்காரர்களுக்கு தரும் மானியம் ஊக்கத்தொகை ஏழைகளுக்குத் தரும் மானியம் மட்டும் சுமையா?
         நம்முடைய நிதி பற்றாக் குறை ரூ.5.22 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் மானியம் வெட்டப்படுகிறது. ஆனால், நாட்டின் பெரு முதலாளிக ளுக்குக் கொடுக்கப்பட் டுள்ள வரிச் சலுகை 5.28 லட்சம் கோடியாகும்.

                பெரு முதலாளிகளுக்குக் கொடுக் கப்படும் மான்யம் ஊக்கு விப்புத் தொகை எனப்படு கிறது. அது ஏழைகளுக்குக் கொடுக்கப்படும்போது சுமை என்றழைக்கப்படு கிறது. நிதிப் பற்றாக்குறை யை 3 சதவீதமாகக் குறைத்து பணக்காரர்களுக்குக் தரப்ப டும் மானியத்தை வெட்டி னாலே நிலைமையைச் சமாளிக்கலாம்.  மூன்றாண்டுகளுக்கு முன் கல்வி பெறும் உரி மைச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தி னால் இன்றுவரை இதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இதை நடைமுறைப் படுத்துவதற்கு ஐந்தாண்டுக ளுக்குத் தேவைப்படும் நிதி ஒரு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் கோடியாகும். இந்திய அரசு 2ஜி அலைக் கற்றைகளை விற்றதில் ஏற் பட்ட இழப்பீடு ஒரு லட் சத்து எழுபத்து ஆறாயிரம் கோடியாகும். உணவுப் பாதுகாப்புக்காக நம்மு டைய நிதித் தேவை ஆண் டொன்றிற்கு 88 ஆயிரம் கோடியாகும், ஆனால் அரசு, நிலக்கரிச் சுரங்கங்க ளின் உரிமங்களை வழங்கிய தில் இழந்தது லட்சங் கோடிகளாகும்.
தோழர். Sita Ram Yechury, M.P.,