2005 முதல் 2008 வரையில் நேரடித் தேர்வுக்கான காலியிடங்களில்
SCREENING COMMITTEE முடிவு அடிப்படையில் SCRAP செய்வதாக
முடிவெடுக்கப்பட்டு , நம்முடைய எதிர்ப்பினால் இதுவரை , ஒழிக்கப்படாமலும்
அதே நேரம் நிரப்பப் படாமலும் SKELETON இல் வைத்திருந்த 17093 இலாக்கா
பணியிடங்களை தற்போது நிதியமைச்சக உத்திரவு அடிப்படையில் ABOLISH
செய்திட இலாக்கா உத்திரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து முதல் கட்டமாக
நேற்று (28.12.12) நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட மத்திய
JCA பணித்திருந்தது.
சென்னையில் CPMG அலுவலக வாயிலில் மதியம் சுமார் 1.00 மணியளவில் மிகச்
சிறப்பான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 300 தோழர்கள் திரண்டு
ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மிகச் சிறப்பான நிகழ்வு. NFPE அஞ்சல் மூன்றின்
மாநிலச் செயலர் தோழர்.J.R. அவர்களும் FNPO அஞ்சல் மூன்றின் மாநிலச்
செயலர் தோழர். G.P. முத்துகிருஷ்ணன் அவர்களும் கூட்டுத் தலைமை ஏற்க , NFPE
/FNPO சம்மேளனங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு கண்டன
உரையாற்றினார்கள். சம்மேளன/அகில இந்தியச் சங்க நிர்வாகிகள் தோழர். S .
ரகுபதி , தோழர். NG , தோழர். A . வீரமணி ஆகியோரும் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.
இதேபோல மதுரை, திருநெல்வேலி, திருச்சி ,ஸ்ரீரங்கம், அரக்கோணம் ,
காஞ்சிபுரம், திருப்பத்தூர் , திருப்பூர், சேலம் மேற்கு போன்ற இடங்களில்
சிறப்பான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக மாநிலச் சங்கத்திற்கு தகவல்
கிடைத்தது . இதர பகுதிகளில் இருந்து இன்னும் இந்த நிகழ்ச்சி குறித்த
தகவல்கள் வந்து சேரவில்லை . சம்மேளன அறைகூவலை ஏற்று, மாநிலச் சங்க அறைகூவலை
ஏற்று,ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திய அனைத்து கோட்ட/ கிளைச்
சங்கங்களுக்கும் , சென்னை பெருநகரில் மிகச் சிறப்பான வகையில் அதிக
எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கும் , அதற்கு
ஊழியர்களை ஒருங்கிணைத்த கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் மாநிலச்
சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.
source: aipeup3tn.blogspot.com
tirunelveli |