CLICK TO VISIT LATEST POSTS

Tuesday, December 25, 2012

உத்வேகமளிக்கும் ஒளிவிளக்காய்...



           இன்று வெண்மணித் தியாகிகளின் 44 வது ஆண்டு நினைவு நாள் .பல்வேறு இடங்களிலும் செங்கொடியேற்றி அத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் .44 உயிர்களை எரித்துக் கொன்றவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் கள். அதேநேரத்தில் வெண்மணித் தியாகி களுக்கு அஞ்சலி செலுத்துவோர் ஆண் டுக்கு ஆண்டு அதிகரித்துவருகின்றனர். ஏனென்றால் அவர்கள் நடத்திய போராட் டம் அரைப்படி கூலி உயர்வுக்காக மட்டும் நடத்தியதல்ல .இந்த நாட்டில் ஒரு சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நடந்துவரும் போராட்டங்களில் ஒன்று அரைப்படி நெல் கூலி உயர்வு மட்டுமல்ல; இரண்டுபடி நெல் கூலி உயர்வு தருவதற் கும் நிலப்பிரபுக்கள் நெல் உற்பத்தியாளர் சங்கம் தயாராகவே இருந்தது. ஆனால் அதற்கு அவர்கள் விதித்த நிபந்தனை அங்கு விவசாயத் தொழிலாளர்கள் ஏற்றி வைத்திருந்த செங்கொடியினை இறக்கி விட்டு, அதே இடத்தில் நெல் உற்பத்தி யாளர் சங்கக் கொடியினை ஏற்ற வேண் டும். இந்த நிபந்தனையை நிராகரித்த விவசாயத் தொழிலாளர்கள் “எங்களை வாழவைத்த செங்கொடியை எக்கார ணம் கொண்டும் இறக்க மாட்டோம். எங்கள் உயிரைக் கொடுத்தேனும் அதைப் பாதுகாப்போம்”என்று முழங்கினார்கள் அதனைத் தொடர்ந்துதான் நிலப்பிரபுக் களும் அவர்களின் குண்டர்களும் சேர்ந்து ஒரு குடிசைக்குள் வைத்து 44 உயிர்களை எரித்த கொடுமை நிகழ்த்தப்பட்டது.

புரட்சி கர இயக்கம் என்றும் போற்றுகிற தியாகத் தீயாக அது ஆனது. அநீதிகளை எதிர்த் துப் போராடும் அனைத்துப்பகுதி மக்க ளுக்கும் உத்வேகமளிக்கும், வழிகாட்டும் ஒளிவிளக்காக அது திகழ்ந்து கொண்டி ருக்கிறது; என்றைக்கும் திகழும்.44 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த புரட்சிகரப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.இன்று விவசாயத்தொழிலாளர்கள் என்ன கூலி கேட்டாலும் உடனே பெறக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஆளும் வர்க் கத்தினர் புதிய தந்திரங்களை மேற்கொள் கிறார்கள். விவசாயத்துறையில் ஏராள மான இயந்திரங்களைப் புகுத்தி விவசாயத் தொழிலாளர் வேலைகளைப் பறிக்கிறார் கள். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைதராமல் அவர்கள் விவசாயத்தை நம்பி பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. வேலை கிடைக்காமல் கிராமங்களில் இருந்து நகரங்களுக்குச் சென்று ஏதாவது ஒரு வேலையைத்தேடி பிழைக்கும் விவசாயத்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. காவிரி டெல்டா மாவட் டங்களில் காவிரி நீர் கிடைக்காத சூழ் நிலை விவசாயிகளின் வாழ்வை நாசப் படுத்திக் கொண்டிருக்கிறது. நமதுநாட்டில் விவசாயத்தையே சீர்குலைக்கச்செய்யும் மத்திய அரசின் கொள்கைகளின் விளைவு தான் மேற்சொன்னவை அனைத்தும்.மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இத்தகைய ஏழை- எளிய மக்க ளைப் பற்றி எந்தக்கவலையும் இல்லை. ஏகாதிபத்தியத்துக்கும் பன்னாட்டு மூல தனத்துக்கும் சேவை செய்வதையே அவர் கள் முழுநேரப்பணியாக செய்து கொண் டிருக்கிறார்கள் அதனால்தான் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு நுழைய அனுமதித்து, 20 கோடி மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக் கியுள்ளார்கள்.

இவர்களுடைய தொழில் வர்த்தகம் அழிக்கப்படும். அந்நிய மூல தனத்தின் கொள்ளை அதிகரிக்கும்.வங்கித்துறையிலும் இன்சூரன்ஸ் துறையிலும் ஓய்வூதியத் திட்டத்திலும் இத்துறைகளில் பணியாற்றும் ஊழியர் களின் கடும் எதிர்ப்பையும் புறம்தள்ளி அந்நிய மூலதனம் நுழைய அனுமதிக் கிறார்கள். இந்தக்கொள்கைகளை எதிர்த்து காங்கிரஸ், பிஜேபி சார்ந்துள்ள தொழிற் சங்கங்களும் ஒன்றுபட்டு வரும் பிப்ரவரி 20-21 ஆகிய இரண்டு நாட்கள் மகத்தான வேலை நிறுத்தப்போராட்டத்தை வரலாறு படைக்கும் விதத்தில் நடத்தவிருக்கிறார் கள் .“தனியொருவனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அளித்திடுவோம்’’. என்று முழங்கினான் பாரதி. ஆனால் பெருமளவு கையிருப்பிலே உணவுதானியங் கள் இருப்பினும் அதை பசியால் வாடும் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச மாகவோ அல்லது குறைந்த விலையிலோ தர மத்திய அரசு மறுத்து வருகிறது. அத னால் தான் உணவுப் பாதுகாப்பை வலி யுறுத்தி 5 கோடி மக்களிடம் இடதுசாரிக் கட்சிகள் கையெழுத்து இயக்கம் நடத்து கின்றன.உலகமயக் கொள்கைகள் நமது கலாச் சாரத்தையும் சீரழித்து வருகின்றன. பெண் களுக்கு எதிரான கொடுமைகள் அதிக ரித்து வருகின்றன.தில்லியில் ஓடும் பேருந் தில் ஒரு மாணவி 6 கயவர்களால் பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்தி லிருந்து தூக்கி எறியப்பட்டு,மருத்துவமனை யில் உயிருக்கு போராடிக்கொண்டிருக் கிறார். இக்கொடுமையைக் கண்டித்து கண்டனக்குரல்கள் நாடு முழுவதும் கடல் அலைகள் போல எழுந்துவருகின்றன. தில்லியில் முக்கியமான ஒருபகுதி 144 தடை உத்தரவிலேயே உள்ளது. அப்பகுதி யில் 4 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் தடைகள் போடப்பட்டு யாரும் செல்லமுடியாமல் ஆக்கப்பட்டுள்ளது. தன் னிச்சையாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தினை காவல்துறை மூலம் அடக்கும் முயற்சியே நடந்து வருகிறது.இந்த மாணவிக்கு நடந்த கொடு மையை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடந்துவரு கின்றன. சென்னையில் நள்ளிரவில் மாண வர்களும் மாணவிகளும் மெழுகுவர்த்தி ஏந்தி முக்கியப் பகுதிகளில் ஊர்வலமாகச் சென்று தங்கள் எதிர்ப்பு உணர்வைக் காட்டியுள்ளனர்.பொருளாதாரத்துறையிலும் பன்னாட் டுத்துறையிலும் மத்திய அரசின் கொள்கை களால் நாடு சந்தித்து வரும் சீரழிவுகளை எதிர்த்து மக்கள் இயக்கங்கள் வலுபெற்று வருகின்றன.



              நாடு விடுதலை அடைந்து 63 வருடங்கள் கடந்த பின்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடருகின்றன.தீண்டாமை என்னும் கொடுமை இன்னும் பல வடிவங்களில் தொடர்கின்றது. . இதற்கு முடிவு கட்ட கிராமப்புற ஏழை மக்களுக்கு நிலம் கிடைக்கும் முறையில் நிலச்  சீர்திருத்தம் அமலாக்கப் பட வேண்டும். வெண்மணி தியாகிகளை நெஞ்சில் நிறுத்தி  இந்த கோரிக்கைகளுக்காக  உழைப்பாளி மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். சுய நலத்திற்காக ஜாதி ரீதியாக, மத ரீதியாக பிளவு படுத்தும் சக்திகளை முறியடிக்க  வேண்டும்.
தியாகிகள் புதைக்க படுவதில்லை. விதைக்க படுகிறார்கள்.


-என்.சீனிவாசன் நன்றி : தீக்கதிர்  25.12.2012