NFPE மற்றும் FNPO சார்ந்த தபால்
காரர் அகில இந்திய சங்கங்களின் அழைப்பை ஏற்று அஞ்சல் நான்கின் 15 அம்ச
பகுதி வாரிக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டி , இன்று மூன்றாவது கட்டமாக
நாடு தழுவிய அளவில் மாநிலத் தலைமையகங்களில் உண்ணாவிரதப் போராட்டம்
வெற்றிகரமாக நடைபெற்றது .
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் ,
சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் , தமிழகத்தின் பல்வேறு
கோட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 200 க்கு அதிகமான தபால் காரர்/MTS
தோழர்கள் இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு
சேர்த்தனர் .
NFPE /FNPO அஞ்சல் நான்கின் சார்பாக ஆறு கட்ட போராட்டம் அகில இந்திய சங்கங்களினால் அறிவிக்கப் பட்டது தெரிந்ததே.
22.06.2013 -முதல் கட்டம் - கோட்ட மட்டங்களில் ஆர்ப்பாட்டம்
28.06.2013- கோட்ட மட்டங்களில் தர்ணா
09.07.2013- மாநிலத் தலைமையகங்களில் உண்ணா விரதம்
23 மற்றும் 24 .7.2013 - மேலே பனியன் அணிந்து கீழே அரை ஆடையுடன் பட்டுவாடா பணி செய்தல் . பெண் ஊழியர் சீருடை இல்லாமல் .
17.08.2013 - டாக் பவன் முன்பாக பெருந்திரள் உண்ணா விரதம்
16.09.2013 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் .
முக்கிய கோரிக்கைகள் :-
1. தபால் காரர் மற்றும் MTS பணியிடங்களை ஒழிக்காதே !
2. காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு !
3. தபால்காரர் பீட்டுகளை இணைக்காதே !
4. விடுப்பு மற்றும் காலிப் பணியிடங்களில் மாற்று ஆள் நியமனம் செய் !
5. விஞ்ஞான பூர்வமாக தபால்காரர் மற்றும் MTSபணிகளை அளவீடு செய்!
6. DATA ENTRY வேலைகளை தபால்காரருக்கு புகுத்தாதே !
7. SPEED POST ஊக்கத் தொகை பட்டுவாடவை எளிமையாக்கு ! .
8. மக்கள் நெருக்கம் மிகுந்த மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு
புதிய அளவீடுகளை நிர்ணயம் செய் !.
9. தபால் காரர் மற்றும் MTS ஊழியருக்கு கேடர் சீரமைப்பை உருவாக்கு !
10.தபால்காரர் மற்றும் எழுத்தர் தேர்வுகளுக்கு அவர்களின் பணித்
தேவைக்கேற்ப கேள்வித்தாள்களை எளிமையாக்கு !
11. தபால் காரர் மற்றும் MTS ஊழியருக்கு காலத்திற்கேற்ற உயர் நிர்ணய
அளவில் சீருடை வழங்கு ! அதன் PURCHASE COMMITTEE யில் ஊழியர்
பிரதிநிதிகளைச் சேர் !
சென்னை CPMG அலுவலக வளாகத்தில்
நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்திற்கு NFPE அஞ்சல் நான்கின் அகில இந்திய
அமைப்புச் செயலர் தோழர் கோபு. கோவிந்தராஜன் மற்றும் FNPO அஞ்சல்
நான்கின் மாநிலச் செயலர் தோழர். குணசேகரன் கூட்டுத் தலைமை ஏற்றனர் .
NFPE சம்மேளனத்தின் முன்னாள் மா
பொதுச் செயலர் தோழர்.K .R ., FNPO சம்மேளனத்தின் மா பொதுச் செயலர் தோழர். D
. தியாகராஜன் , NFPE சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் செயலர் தோழர்.
ரகுபதி , NFPE அஞ்சல் மூன்றின் செயல் தலைவர் தோழர் NG , உதவிப் பொதுச்
செயலர் தோழர் வீரமணி , NFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர்
J.R., FNPO தமிழ் மாநில அஞ்சல்
மூன்றின் செயலர் தோழர் முத்துக்கிருஷ்ணன் , NFPE அஞ்சல் நான்கின் மாநிலச்
செயலர் (எலெக்ட்) தோழர் ராஜேந்திரன் , NFPE R 3 மாநிலச் செயலர் தோழர்
சங்கரன், FNPO
R 3 மாநிலச் செயலர் தோழர் குமார் ,
NFPE SBCO மாநிலச் செயலர் தோழர் அப்பன்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள்
கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினார் .
உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து
கொண்ட அஞ்சல் நான்கின் மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட / கிளைச்
செயலர்கள் அனைவரும் அடுத்த கட்ட போராட்டமான அரை ஆடை போராட்டத்தை
தமிழகமெங்கும் மிகப் பெரிய அளவில் நூற்றுக்கு நூறு விழுக்காடு
வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று சூளுரைத்துப் பேசினார் . இறுதியில்
லூயில் மணி அவர்கள் நன்றி கூற , ஆர்ப்பாட்ட கோஷங்களுடன் போராட்டம் மாலை
05.00 மணியளவில் இனிதே முடிக்கப் பட்டது .
பொதுக் கோரிக்கைகளுக்கு, மத்திய
அரசு ஊழியர் கோரிக்கைகளுக்கு நாம் போராடி வரும் போதே நம் அஞ்சல்
பகுதியில் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு RMS மூன்று, RMS
நான்கு மற்றும் GDS ஊழியர்களின் பகுதி வாரிக் கோரிக்கை களுக்காகவும்,
நாம் இணைந்தும் தனித் தனியேவும் தொடர்ந்து போராடி வருகிறோம் !
தொழிலாளர்களின் வாழ்க்கையில்
ஏற்படும் இன்னல்களைக் களைந்திட போராட்டம் ஒன்றே வழி என்பதை நாம்
உணர்ந்திருக்கிறோம். ! நிச்சயம் போராடாமல் எந்த ஒரு வெற்றியையும் நாம்
பெற்றதில்லை என்பது தெளிவு ! அந்த திசை நோக்கி நாம் பயணிப்போம் !
ஒன்று படுவோம் ! போராடுவோம் !
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
வெற்றி கிட்டும் வரை போராடுவோம் ! இறுதி வெற்றி நமதே !
வாழ்த்துக்களுடன்
J.R. மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று தமிழ் மாநிலம் .