அரசு ஊழியர்கள் என்றாலே மக்கள் சேவகர்கள் என்று பொருள். அவர்கள் பணி ஓய்வுக்கு பின் பொருளீட்ட முடியாத நிலை ஏற்படும்பொழுது அவர்களை பாதுகாக்கும் பொருட்டு ஓய்வூதியம் வழங்கப் படுகிறது. இதனை அழிக்க வந்தது தன் புதிய ஓய்வூதிய திட்டம். இது ஒரு மோசடி திட்டம். வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் இம்மூன்றும் ஓய்வுகால பலன்களாகும். ஓய்வூதியம் பெறும் போது தொழிலாளி பெற்ற கடைசி அடிப்படை சம்பளத்தின் பாதி தொகை ஓய்வூதியமாக கிடைக்கும். இந்த திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு 2003 ல் ஒரு அவசர சட்டத்தின் மூலம் NEW PENSION SCHEME கொண்டு வந்தது. (திணித்தது). இது ஒரு மோசடி திட்டம். UPA-I அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க ஒரு மசோதாவை தாக்கல் செய்தது. இடது சாரிகளின் கடுமையான எதிர்ப்பினால் கிடப்பில் போடப்பட்டது.சட்டம் நிறைவேறாதநிலையில் 1.1.2004 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு NEW PENSION SCHEME அமுலில் உள்ளது. கேரள, மேற்கு வங்க திரிபுர அரசுகள் இந்த திட்டத்தை அமுல் படுத்த வில்லை. N.P.S. ல் ஊழியரின் ஊதியத்தில் 10%(basic pay + DA) பிடித்தம் செய்யப்படும். ஓய்வு பெறும் போது 60% ஊழியருக்கு 40% ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் முதலீடு செய்யப்படும். முழு சர்வீஸ் முடிக்காமல் இடையில் ஓய்வு பெற்றால் 20% ஊழியருக்கும் 80% இன்சூரன்ஸ் கம்பெனியில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீட்டிலிருந்து அவருக்கு pension வழங்கப்படும். குறைந்த பட்ச pension க்கு கூட உத்திரவாதம் இல்லை. இந்தpension கூட அவர் உயிருடன் உள்ளவரை தான். குடும்பத்திற்கு கூட எதுவும் கிடைக்காது.
1.04.2004 க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:
^ கடைசி மாத சம்பளத்தில் 50 % முழு பென்ஷன் கிடைக்கும்.
^ இந்த பென்ஷன் ல் 40% surrender செய்து மொத்தமாக முன்பே பணமாக வாங்கிக் கொள்ளலாம். இதற்கு commutation என்று பெயர்.
^ commutation செய்த தொகைக்கும் சேர்த்து மாதம் தோறும் விலை உயர்வுக்கு ஏற்ப DA உண்டு.
^ மற்றவர்களுக்கு ஊதியம் உயரும் போதெல்லாம் பென்ஷன் உயரும்.
^ இறந்துவிட்டால் மனைவிக்கோ, கணவனுக்கோ குடும்ப பென்ஷன் உண்டு. அதற்க்கும் DA உண்டு. divorce ஆனவர்களுக்கும் உண்டு.
^ கணவன் அல்லது மனைவி இறந்து விட்டால் 25 வயது வரை மகன் அல்லது மகள் குடும்ப பென்ஷன் பெறலாம்.
^ பணியில் இருக்கும் இறந்தால் அவரது மனைவி அல்லது கணவனுக்கு 10 ஆண்டுகளுக்கு 50 % சம்பள பென்ஷன் உண்டு. அதன் பின் 30% சம்பள பென்ஷன் + DA கிடைக்கும்.
^ ஓய்வு பெறும் போது கடைசி மாத சம்பள + DA சேர்த்து 16.5 மாத சம்பளம் வரை graduity (Panikkodai) உண்டு.
புதிய pension திட்டத்தில்
* மேலே சொன்ன எதுவும் கிடையாது.
மேலும் இந்த திட்டம் பங்கு சந்தை முதலாளிகளுக்கு உதவும் முதலாளித்துவ கண்ணோட்டத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது. உழைப்பவர்களின் ஒரே நம்பிக்கையான ஓய்வு கால பலன்களை பங்கு சந்தை சூதாட்டத்துடன் இணைக்கும் கொடிய குற்ற செயலாகும்.
pension போராடி பெற்ற உரிமையாகும். இந்த நாட்டின் உச்ச நீதி மன்றமே இதை உறுதி செய்துள்ளது. pension இலவசமும் அல்ல. பிச்சையும் அல்ல. பணிக்காலத்திலேயே ஊழியர் ஈட்டிக் கொள்கிற சொத்து.
புதிய pension திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் .