1968 டிசம்பர் 25 தமிழ் மக்களை பேரதிர்ச்சி ஏற்படுத்திய அந்த கொடூர செயல் அன்று தான் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 உயிர்களை நில பிரபுக்கள் ஒரே குடிசையில் தீயிட்டு கொளுத்திய கொடுஞ்செயல், கீழத் தஞ்சையில், வெண்மணி கிராமத்தில் நடைபெற்றது. எரிந்து சாம்பலான அத்தனை பேரும் தாழ்த்தப்பட்ட விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். ஆழாக்கு நெல்லை அதிக கூலியாக கேட்டதற்கு தஞ்சை பிரபுக்கள் நடத்திய கொடுமை அது !
நாடு விடுதலை அடைந்து 63 வருடங்கள் கடந்த பின்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடருகின்றன.தீண்டாமை என்னும் கொடுமை இன்னும் பல வடிவங்களில் தொடர்கின்றது. . இதற்கு முடிவு கட்ட கிராமப்புற ஏழை மக்களுக்கு நிலம் கிடைக்கும் முறையில் நிலச் சீர்திருத்தம் அமலாக்கப் பட வேண்டும். வெண்மணி தியாகிகளை நெஞ்சில் நிறுத்தி இந்த கோரிக்கைகளுக்காக உழைப்பாளி மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். சுய நலத்திற்காக ஜாதி ரீதியாக, மத ரீதியாக பிளவு படுத்தும் சக்திகளை முறியடிக்க வேண்டும்.
வெண்மணி தியாகிகள் புகழ் வாழ்க!
தியாகிகள் புதைக்க படுவதில்லை. விதைக்க படுகிறார்கள்.