மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் தேசிய சம்மேளன கூட்டம் மும்பையில் 1.12.10 நடைபெற்றது. கூட்டத்தில் 2 முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டது.
முதலாவதாக DA 50% அளவை எட்டியவுடன் 6 வது ஊதிய குழு பரிந்துரையின்படி 25% உயர்வு என்பதோடு 5 ஆவது ஊதிய குழு போல் 50% DA முழுமையாக basic pay உடன் இணைத்திட வேண்டும் என்பது.
இரண்டாவதாக மத்திய அரசு ஊழியர்க்கும் 5 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். பொதுத் துறையில் 5 ஆண்டுக்கு ஒருமுறை என்பதை 10 ஆண்டுக்கு ஒரு முறை என மாற்ற முயற்சி செய்தது. பொதுத் துறை ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பினால் அரசு தனது முடிவை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மத்திய அரசு ஊழியர்க்கும் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதே சரியான முடிவாகும். ஊழியர்களின் மனவோட்டம் என்பது இந்த கோரிக்கையின் பால் செல்ல வேண்டும். இந்த கோரிக்கை அடிப்படை கோரிக்கையாக மாற்ற வலுவான பிரச்சாரம் நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். தோழர் K.Ragavendran இந்த கோரிக்கை குறித்து விரிவாக புதிய பார்வை புதிய கோரிக்கை என்ற தலைப்பில் உழைக்கும் வர்க்கம் December 2010 இதழில் கட்டுரை எழுதி உள்ளார்.