புதுதில்லி, ஜன. 25: கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர 5 அம்ச உத்தியை அரசு வகுத்திருப்பதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1. கறுப்புப் பணத்துக்கு எதிராக உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்திய அரசும் சேருவது,
2. கறுப்புப் பணத்தை வெளிக்கொணர உரிய சட்டங்களை இயற்றுவது,
3. சட்ட விரோதமாக ஈட்டப்படும் வருவாயைக் கண்டுபிடிக்கவும் அவற்றைப் பறிமுதல் செய்யவும் உரிய துறைகளையும், ஏற்கெனவே உள்ள துறைகளில் புதிய பிரிவுகளையும் உருவாக்குவது,
4. கறுப்புப் பணத்தை கண்டுபிடித்து கைப்பற்ற இயற்றிய சட்டங்களையும், ஏற்படுத்திய துறைகளையும் நன்கு பயன்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உரிய நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது,
5. இந்தப் பணிகளை விரைவாகவும் சரியாகவும் செய்ய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உரிய பயிற்சிகளை அளிப்பது ஆகியவையே அரசின் 5 அம்ச உத்தியாகும் என்றார் பிரணாப் முகர்ஜி.