CLICK TO VISIT LATEST POSTS

Thursday, February 24, 2011

தொழிலாளி வர்க்கம் புதிய வரலாறு

புதுதில்லி, பிப். 23-

சுதந்திர இந்திய வரலாற்றில் முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு லட்சோப லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி தில்லி யில் புதனன்றுநடைபெற்றது.

விலைவாசி உயர்வுக்குஎதிராகவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தக்கோரி யும் தொழிற்சங்க உரிமைகளை பாது காக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்தப் பேரணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், எல்ஐசி ஊழியர்கள் மற்றும் முகவர் கள், பாதுகாப்புப்படை ஊழியர்கள் திரண்டதால் தில்லி ஸ்தம்பித்தது.

மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மே ளனம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங் களின் போராட்டக்குழு, பாதுகாப்புப் படை ஊழியர்கள் சங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் பெட ரேசன் ஆகியவற்றின் அறைகூவலுக் கிணங்க பிப்ரவரி 23ஆம் தேதியன்று தில்லியில் லட்சக் கணக்கில் தொழி லாளர்களும், அரசு ஊழியர்களும், வங்கி, இன்சூரன்ஸ், பாதுகாப்பு ஊழியர்களும் அணி திரண்டனர்.

மத்திய தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, யுடியுசி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் “நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்போம்” என்ற முழக்கத்துடன் இந்தப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன.

பேரணியில் கலந்து கொள்வதற் காக லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் 21ஆம் தேதியன்றே தில்லி வந்துவிட்டனர். அவர்கள் தங்குவதற் காக சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில் ராம்லீலா மைதானத்தில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவர் கள் அல்லாமல் 23ஆம் தேதி காலையில் லட்சக்கணக்கான தொழி லாளர்களும் ஊழியர்களும் தில்லி வந்து சேர்ந்தனர்.

பேரணியினர் விலைவாசி உயர் வுக்கு எதிராகவும், வேலையின்மைக்கு எதிராகவும், தொழிலாளர் நலச் சட் டங்கள் மீறப்படுவதற்கு எதிராகவும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வும், முறைசாராத் தொழிலாளர்க ளுக்கு சமூகப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவை நிறைவேற்றக்கோரியும் ஆவேசத்துடன் முழக்கமிட்டவாறே பேரணியில் வந்தனர்.

தில்லி வந்த தொழிலாளர்களில் கணிசமான பகுதியினர் ராம்லீலா மைதானத்திலிருந்தும், மற்றவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேரணி யாக நாடாளுமன்ற வீதியை நோக்கி வந்தனர்.

அங்கே நடைபெற்ற கூட்டத்தில் ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவரெட்டி, சிஐடியு தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச்செயலாளர் தபன்சென், ஏஐடியுசி பொதுச்செயலாளர் குரு தாஸ் தாஸ் குப்தா, எச்எம்எஸ் பொதுச் செயலாளர் உமரமால் ரோஹித் உள் ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

இந்தப்பேரணி காரணமாக தில்லி நகரமே தொழிலாளர்களால் முற்றுகை யிட்டது போன்று காணப்பட்டது. பேரணி துவங்கும் இடத்திற்குக்கூட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் களால் வந்துசேர முடியவில்லை.

தொழிலாளர்கள் பேரணி என்றால் பொதுவாக செம்படைப் பேரணி யாகத்தான் இருக்கும்.

ஆனால் இன்று நடைபெற்ற பேரணியில் ஐஎன்டியுசி யைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மூவர்ணக் கொடியுடன் கணிசமான அளவில் கலந்து கொண்டு, செம்படைப் பேரணியை வண்ணமயமான பேரணி யாக மாற்றியது குறிப்பிடத் தக்கது.